Asianet News TamilAsianet News Tamil

1.25 கோடி பேர் சிக்கப்போறாங்க... - வலை விரித்துவிட்டது வருமானவரி வரித்துறை

Increasing the number of tax payers in the country the Income Tax Department has set a target of 1.25 crore new tax payers in the current fiscal.
Increasing the number of tax payers in the country the Income Tax Department has set a target of 1.25 crore new tax payers in the current fiscal.
Author
First Published Sep 28, 2017, 9:47 PM IST


நாட்டில் வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நடவடிக்கையாக, இந்த நிதி ஆண்டில் புதிதாக 1.25 கோடி பேரை வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் கொண்டு வர வருமான வரித் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரியம்

மத்திய வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய நேரடி வரிகள் வாரியமும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வருமான வரித்துறைக்கான கொள்கை முடிவுகளை இந்த வாரியம்தான் எடுக்கிறது. இந்த நிதி ஆண்டில் புதிதாக 1.25 கோடி பேரை வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் கொண்டு வர வரித் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கான கொள்கைகளை வகுத்து, அதிகாரிகளை முடுக்கிவிட்டுள்ளது.

அதாவது, ஏற்கனவே வருமானவரி செலுத்தி தொடர்ந்து செலுத்தாமல் இருப்பவர்கள், வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருமானம் வந்தும், அதை கணக்கில் கொண்டு வராதவர்கள் ஆகியோரை பொறிவைத்து பிடித்து, அவர்களை வருமானவரி செலுத்த வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான நிறுவனங்களும் சிக்க இருக்கின்றன.

குறிப்பாக ஐதராபாத் மற்றும் புனே மண்டலங்களில் முறையே 12.8 லட்சம் மற்றும் 11.8 லட்சம் பேரை புதிதாக வரி செலுத்துவோர் பட்டியலில் கொண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்து சென்னை மண்டலத்தில் 10.47 லட்சம் பேர், சண்டிகர் மண்டலத்தில் 10.41 லட்சம் பேரை புதிதாக வருமான வரி பட்டியலில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

வருமானவரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் கூடிய நடத்தி கூட்டமான ‘ராஜஸ்வ ஞனசங்கம்’ எனும் மாநாட்டில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2016-17ம் ஆண்டு நாட்டில் 5.43 கோடி பேர் வருமான வரித்தாக்கல் மற்றும் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். இது கடந்த 2015-16ம் ஆண்டைக் காட்டிலும் 17 சதவீதம் அதிகமாகும். அதாவது 1.26 கோடிபேர் புதிதாக வருமானவரி பட்டியலில் சேர்க்கப்பட்டு வருமானவரி செலுத்த வைக்கப்பட்டுள்ளனர் எனப்து குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios