Asianet News TamilAsianet News Tamil

என்னடா இது வம்பா போச்சு! குளிர் காலத்தில் அதிகரிக்கும் வெப்பம்! எந்தெந்த மாநிலம் தெரியுமா? எச்சரிக்கும் வானிலை

அடுத்த இரண்டு வாரங்களுக்கு இயல்பை விட அதிகமான வெப்பநிலை இருக்கும் என தனியார் வானிலை ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். 

Increasing heat in South India during the winter season tvk
Author
First Published Jan 23, 2024, 10:49 AM IST

தென்னிந்தியா மாநிலங்களில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இயல்பை காட்டிலும் வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை இயக்குனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

உலகம் முழுவதும் பொதுவாக 4 பருவ காலங்கள் பின்பற்றப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் 6 பருவ காலங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழகத்தில் டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கி ஜனவரி மாதம் முழுவதும் குளிர்காலம் நிலவும். பிப்ரவரியிலும் லேசான குளிர் இருக்கும். தமிழ் மாதத்தைப் பொறுத்தவரை, மார்கழி மாதம் கடும் பனிப்பொழிவு ஏற்படும். தை, மாசி மாதத்திலும் லேசான பனி நீடிக்கும். குறிப்பாக, அதிகாலை நேரத்தில் அதிக குளிரால் பனி மூட்டம் ஏற்படுவது வழக்கம். ஆனால், தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

இதையும் படிங்க;- எதிர்காலத்தில் பரவும் இந்த நோய் கோவிட்-ஐ விட 20 மடங்கு ஆபத்தானதாக இருக்கும் : WHO எச்சரிக்கை

இதன் காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக விபத்துகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இயல்பை விட அதிகமான வெப்பநிலை இருக்கும் என தனியார் வானிலை ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க;-  அதிக உப்பு சாப்பிடுவதால் ஆண்டுதோறும் பலர் இறப்பா..? WHO கூறும் திடுக்கிடும் தகவல் இதோ..

குறிப்பாக கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளிலும் பகல் நேரத்தில் இயல்பை காட்டிலும் வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ளது. இரவில் குளிர் அதிகமாக இருந்தாலும் பகல் நேரத்தில் பதிவாகும் வெப்பம் அதிகமாக உள்ளது. இது கோடை வெயில் காலம் குறித்த எச்சரிக்கை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தமிழகத்தை பொறுத்தை வரையில் குறைந்த அளவே வெப்பம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios