வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா? நிதி அமைச்சகம் பரிந்துரை..

மத்திய அரசின் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.. இதில் வரி சீரமைப்பு மற்றும் சலுகைகள் அறிவிப்பது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து நிதி அமைச்சக அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் அனைத்துத் தரப்பினரும் மிக முக்கியமாக உயர்த்தப்படுமா என்பதுதான். மத்திய அரசின் உயர்பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து பொது மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து பணவீக்கமும் குறைந்து வருவதாக மத்திய அரசின் பொருளாதார புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எனவே வருமானவரி செலுத்துவோருக்கு சலுகைகள் அளிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.

ஏற்கனவே மோடியும் வருமான வரி செலுத்துவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். தற்போது வருமான வரி விலக்கு உச்சவரம்பு 2½ லட்சம் ரூபாயாக உள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 3 லட்சமாகவும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 லட்சமாகவும் உச்சவரம்பு உள்ளது.

இந்த உச்சவரம்பை.3½ லட்சம்4½ லட்சம்  மற்றும் 5 லட்சம் என 3 பிரிவாக உயர்த்த நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்கும் நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இப்பிரச்சனையில் பிரதமர் அலுவலகம்தான் இறுதி முடிவு எடுக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி விதிப்பு தொடர்பாக நிதி அமைச்சகம் எடுக்கும் அனைத்து பரிந்துரைகளையும் பிரதமர் அலுவலகம் தீவிரமாக பரிசீலிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே இந்த ஆண்டு வருமான வரிவிலக்கு உச்சவரம்பை இரு மடங்காக அதிகரிக்கலாம் என்று வருமான வரி ஆலோசகர்களும் அரசுக்கு தெரிவித்துள்ளனர். இதே போல் கார்பரேட் நிறுவனங்களின் வருமான வரி 1.5 சதவீதம் குறையும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.