ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட போலியான பான்  கார்டுகள் பயன்படுத்துவதை  கண்டுப்பிடித்த  வருமானவரித்துறையினர் அவற்றை அதிரடியாக  முடக்கியுள்ளது

ஆதார் எண்ணை கண்டிப்பாக பான் எண்ணுடன் இணைக்க  வேண்டும் என  மத்திய அரசு தெரிவித்து இருந்தது.இதன் மூலம் பல ஊழல்களை கண்டுப்பிடிக்க முடியும் என்பதாலும்,வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்படும் சொத்துக்களை முடக்குவதற்காகவும்,இன்னும் பல  குறிக்கோள்களுக்காக ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது.

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைத்த பிறகு, வருமானவரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் ஒரே பெயரில், பொய்யான  விவரங்களை  கொடுத்து பெறப்பட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வருமானவரித்துறையினர்  அதிரடியாக முடக்கி உள்ளனர்

மேலும் நாடு முழுவதும்  இதுவரை 11.44   லட்சம் போலியான பான் கார்டுகளை கண்டறிந்து முடக்கப்பட்டுள்ளது.

மேலும் நாம் பயன்படுத்தும் பான் கார்டு ஆக்டிவாக இருக்கிறதா என்பதை தெரிந்துக்கொள்ள  http://www.incometaxindiaefiling.gov.in  என்ற  இணையதளத்தில் சென்று பார்க்கலாம்

இதுவரை பான் கார்டு பெற்றுள்ள 29 கோடி பேரில், 6.2 கோடி பேர் மட்டுமே ஆதார் எண்ணை, பான் எண்ணுடன் இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 5.2 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்வதாக புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.