பிபிசி அலுவலகங்களில் சோதனை நடத்தியது தொடர்பாக, மத்திய வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. 

பிபிசி அலுவலகங்களில் சோதனை நடத்தியது தொடர்பாக, மத்திய வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்து பிபிசி நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவணப்படத்தை வெளியிட்டு இருந்து. இந்தியா தி மோடி குவெஸ்டீன் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனிடையே மும்பை, டெல்லியில் உள்ள பிபிசி அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: கர்நாடக பட்ஜெட்| காதில் பூ வைத்து வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிபிசி அலுவலகங்களில் சோதனை நடத்தியது தொடர்பாக, மத்திய வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், பிபிசி வருவாய் விவரங்கள் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழி ஒளிபரப்புகளின் லாப விவரங்களுடன் ஒத்துப் போகவில்லை. சில பரிவர்த்தனைகளை பிபிசி நிர்வாகம் கணக்கில் காட்டவில்லை. முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதானி குழும மோசடி வழக்கு விவகாரம்... மத்திய அரசின் யோசனையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!!

பல்வேறு வருவாய் பிரிவுகளில் வரி செலுத்தப்படவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பிபிசி வருவாய் விவரங்கள் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழி ஒளிபரப்புகளில் லாப விவரத்துடன் ஒத்துப்போகவில்லை. டிவி, டிஜிட்டல், ரேடியோ என பிபிசி செய்திகள் மூலம் வரும் வருவாயை கணக்கிடுவதில் விதிமீறல் நடைபெற்றுள்ளது. ஆய்வின் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. பல்வேறு வருவாய் பிரிவுகளில் வரி செலுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.