In the same month 3 lakh passengers avoided traveling
தலைநகர் டெல்லியில் மத்திய அரசு நிர்வாகத்தால் இயக்கப்படும் மெட்ரோ ரெயிலில் கட்டணத்தை உயர்த்தியதன் மூலம், ஒரே மாதத்தில் 3 லட்சம் பயணிகள் அதில் பயணிப்பதை தவிர்த்துள்ளனர் என்பதுதகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே கடந்த மே மாதம் 100 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டநிலையில், மீண்டும் செப்டம்பர் மாதம் மத்திய அரசு உயர்த்தியது. ஒவ்வொரு படிநிலையிலும் குறைந்தபட்சம் ரூ.10 உயர்த்தப்பட்டது.
அப்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் கட்டணம் உயர்த்தப்பட்டதால், 3 லட்சம் பயணிகளை மெட்ரோ நிர்வாகம் இழந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 27.4 லட்சம் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த நிலையில், அக்டோபர் மாதத்தில் 11சதவீதம் குறைந்து 24.2 சதவீதமாகக்குறைந்துள்ளது.
கடந்த மே மாதம் உயர்த்தப்பட்ட கட்டணத்தால், ஜூன் மாதம் 1.5 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயில் பயணத்தை தவிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
மெட்ரோ ரெயில் கட்டண உயர்வில் டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவாலுக்கும், மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஹர்திக் புரிக்கும் இடையேகடும் மோதல் நிலவியது. கட்டண உயர்வுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.ஆனால், கட்டணம் உயர்த்தப்பட்டால்தான், மெட்ரோ ரெயில் சேவையை தரமாக அளிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் வாதிட்டு கட்டண உயர்வை அமல்படுத்தினார். ஆனால், ஒரே மாதத்தில் 3 லட்சம் பயணிகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
