In the Ramayana who was originally opposed to terrorism Modi different description jatayutan
பழங்கால புராணங்களில் இருந்து இப்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். உலகில் தீவிரவாதத்தை முதலில் எதிர்த்தவர் ராமாயணத்தில் வரும் ஜடாயுதான்(கருடன்) என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
தெலுங்கு, கன்னட மொழி பேசுபவர்களின் யுகாதி ஆண்டு பிறப்பதையொட்டி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இல்லத்தில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பிரதமர் மோடி, வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், எம்.பி.கள் பலர் கலந்து கொண்டனர். கலைநிகழ்ச்சிகள், புராணங்கள் தொடர்பான நாடகங்கள், நாட்டியம், இசைக்கச்சேரி போன்றவை நடத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பிரமதர் மோடி பேசியதாவது-
புராணங்களில் தீர்வு
இந்த உலகத்தை தீவிரவாதம் இருக்கமாக பற்றிக்கொண்டு, மனிதர்களுக்கு பெரிய சவாலை தூக்கி எறிந்து இருக்கிறது. நாம் நமது புராணங்களில் வரும் சம்பவங்களை இப்போதுள்ள பிரச்சினைகளுக்கு ஒப்பிட்டு பார்த்தால் தீர்வு கிடைக்கும்.
ஜடாயு
தீவிரவாதத்தை முதன்முதலில் உலகில் எதிர்த்தவர் ராமாயணத்தில் வரும் ஜடாயு(கருடன்) தெரியுமா?. அவர்தான் உலகிற்கு தீவிரவாதத்தை எதிர்க்க அச்சப்படக்கூடாது என்ற செய்தியை அளித்தார்.
ராவணன் சீதா தேவியை தூக்கிச் சென்றபோது, வழியில் மறித்து சண்டையிட்டு, தீவிரவாதத்துக்கு எதிரான தனது நிலையை ஜடாயுவெளிப்படுத்தினார்.
மனிதர்களுக்கு செய்தி
பெண்ணின் மரியாதையைப் பாதுகாக்க ஜடாயு தனது உயிரை தியாகம் செய்தார். தீவிரவாதத்தை எதிர்க்க நமக்கு,ஜடாயுவின் சண்டை உத்வேகமாக இருக்கும். உலகில் வாழும் மனிதர்களுக்கு ஜடாயு உணர்த்திய செய்தி இதுவாகும்.
கலாச்சார பரிமாற்றம்
இந்த நாட்டில் பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் இருக்கின்றன. மக்களுக்கு இடையே கலாச்சார பரிமாற்றங்கள் நடப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த விசயத்தில் ஹரியானா, தெலங்கானா மாநிலம் ஒப்பந்தம் செய்து கையொப்பம் இட்டு விட்டன. கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் புதிர் போட்டிகள் ஏற்பாடு செய்து, கலாச்சாரத்தையும், மொழிகளையும் மாநில மக்களுக்கு இடையே பிரிமாற்றம் செய்ய வேண்டும்.
இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை இதுதான் நமது வலிமை. அடையாளம். இந்த நேரத்தில் அனைத்து மக்களுக்கும் நான் யுகாதி வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
