rahul: bilkis bano : பிரதமர் ஜி! உங்க பேச்சையும், செயலையும் தேசமே வேடிக்கை பார்க்கிறது: ராகுல் காந்தி தாக்கு
குஜராத்தில் பில்கிஸ் பானு பலாத்கார வழக்கிலும், குடும்பத்தினர் கொலை வழக்கிலும் 11 பேர்விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடியின் பேச்சையும், செயலையும் தேசமே வேடிக்கை பார்க்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளுத்து வாங்கியுள்ளார்.
குஜராத்தில் பில்கிஸ் பானு பலாத்கார வழக்கிலும், குடும்பத்தினர் கொலை வழக்கிலும் 11 பேர்விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடியின் பேச்சையும், செயலையும் தேசமே வேடிக்கை பார்க்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளுத்து வாங்கியுள்ளார்.
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பின் மார்ச் 3-ம் தேதி ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானுவையும், அவரின் குடும்பத்தினர் 7 பேரையும் ஒரு கும்பல் தாக்கியது.
கேரள ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் சட்டத்திருத்தம்: பினராயி விஜயன் அமைச்சரவை ஒப்புதல்
அந்தத் தாக்குதல் நடந்த நேரத்தில் பில்கிஸ் பானு 5 மாதக் கர்ப்பிணியாக இருந்தார். அவரைத் தாக்கிய அந்த கும்பல் அவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்தது. அதுமட்டுமல்லாமல் பில்கிஸ் பானுவின் கையில் வைத்திருந்த இரண்டரை வயதுக் குழந்தை உல்ளிட்ட 7 பேரையும் கொலை செய்து அந்த கும்பல் தப்பி ஓடியது.
இந்த வழக்கில் 11 பேரை சிபிஐ கைதுசெய்தது. இவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது இதை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி, ஒவைசி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பில்கிஸ் பானு வழக்கு: முரண்படும் பாஜக: மத்தியில் ஒருவிதம் குஜராத்தில் வேறுவிதம்
இப்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் தனது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ 5மாத கர்ப்பிணிப் பெண்ணை பலாத்காரம் செய்தவர்கள், அவரின் 3 வயது குழந்தையை கொலை செய்தவர்கள் ஆசாதி கா அம்ரித் மகோத்சவத்தின்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். பெண்கள் சக்தி பற்றி பொய்பேசுபவர்களால் இந்த தேசத்தின் பெண்களுக்கு என்ன செய்தி கூற முடியும்.
பிரமதர் ஜி, உங்கள் வார்த்தைக்கும், செயலுக்கும் இடையிலான வேறுபாட்டை தேசமே வேடிக்கை பார்க்கிறது”
வாரணாசி தலைநகரம்;இந்துக்களுக்கு மட்டுமே வாக்குரிமை: ஹி்ந்து தேசம் அறிவிக்க வரைவு அறிக்கை
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.