Asianet News TamilAsianet News Tamil

Hindu Rashtra: முஸ்லிம்,கிறிஸ்தவர்களுக்கு ஓட்டு இல்லை:மீண்டும் வர்ணாசிரமம்:இந்து தேசம் குறித்த வரைவு அறிக்கை

30 பேர் கொண்ட சாதுக்கள் குழு, இந்து பண்டிதர்கள் ஆகியோர் வாரணாசியில் உள்ள சங்கராச்சார்யா பரிஷத்துடன் இணைந்து இந்தியாவை இந்துதேசமாக அறிவிக்க வரைவு அறிக்கையை தயாரித்துள்ளனர்.

Seers draught a demand for a Hindu nation with Varanasi as its capital.
Author
New Delhi, First Published Aug 16, 2022, 3:58 PM IST

30 பேர் கொண்ட சாதுக்கள் குழு, இந்து பண்டிதர்கள் ஆகியோர் வாரணாசியில் உள்ள சங்கராச்சார்யா பரிஷத்துடன் இணைந்து இந்தியாவை இந்துதேசமாக அறிவிக்க வரைவு அறிக்கையை தயாரித்துள்ளனர்.

இந்த வரைவுஅறிக்கையில் இந்தியாவில் வாழும் ஹிந்துக்களுக்கு மட்டுமே வாக்குரிமை, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு வாக்குரிமை இல்லை எனத் தெரிவி்க்கப்பட்டுள்ளது. தலைநகராக டெல்லிக்குப் பதிலாக வாரணாசியை அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரித்துவார் சான்சத் மடாதிபதிஆனந்த் ஸ்வரூப் இந்த வரைவு அறிக்கையை வெளியிட்டார். 

உ.பி., ஆந்திராவில் உள்ள 13 தங்கச் சுரங்களை விற்க மத்திய அரசு முடிவு

2023ம் ஆண்டு மார்ச் மாதம் பிரயாக்ராஜ் சங்கம்நகரில் நடக்கும் பிரயாக்ராஜ் தனம் சனாசத்தில் இந்த 32 பக்க வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரயாக்ராஜில் நடந்த மகா மேளாவில் தர்ம சானசத்தில் இந்துதேசம் அறிவிக்க சாதுக்கள் தீர்மானம் கொண்டு வந்தனர்.

 இந்துதேசத்தை உருவாக்குவதற்கான வரைவு அறிக்கை தயாரித்தல், வழிகாட்டி கையேடு போன்றவற்றை உருவாக்க வேண்டும் என சாதுக்கள், மதகுருமார்கள் அப்போது தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, இந்துபண்டிதர்கள், சட்ட வல்லுநர்கள் மூலம், வரைவு அறிக்கையை உருவாக்கியுள்ளனர். சாம்பவி பீதாதாஸ்வர் ஆனந்த் ஸ்வரூப் தலைமையில் விரிவான அறிக்கையின் ஒருபகுதியாகும். ஒட்டுமொத்தமாக வழிகாட்டி கையேடு 750 பக்கங்கள் கொண்டதாக இருக்கும். 

ஷிவமோகாவில் பதற்றம்:கத்திக்குத்து சம்பவத்தில்ஒருவர் மீது போலீஸார் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது

இந்தியாவை இந்துதேசமாக அறிவிக்க வேண்டும் என்பதற்கான கருத்தொற்றுமையை மக்களிடத்தில் உருவாக்கவே இந்துராஷ்டிரா கமிட்டி உருவாக்கப்பட்டது. இந்த கமிட்டி, கடந்த ஆண்டு பிரயாக்ராஜில் நடந்த மகா மேளாவில் இந்துதேசம் உருவாக்கவேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தது. இந்துக்களின் உரிமையைக் காக்கவும், இந்தியாவை இந்துதேசமாக அறிவிக்கவும் இதுதான் சரியான நேரம் என்று இந்துராஷ்டிரா கமிட்டி தெரிவி்த்தது.

சுவாமி ஆனந்த் ஸ்வரூப் கூறுகையில் “ நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் அடிப்படை நாதம் என்பது இந்தியாவை இந்துதேசமாக அறிவிப்பதுதான். இதுவரை 300 சட்டத்திருத்தங்கள் நடந்துள்ளன. மதச்சார்பற்ற என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது இஸ்லாமிய தீவிரவாதம் அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராகஇருக்கிறார்கள்.  ஆதலால் இந்தியாவை இந்துதேசமாக அறிவிக்க இது சரியான நேரம்”  

பில்கிஸ் பானு பலாத்காரம், கொலை வழக்கு: குற்றவாளிகள் 11 பேரையும் விடுதலை செய்தது குஜராத் அரசு

இந்த வரைவு அறிக்கையில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருக்கும். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு வாக்குரிமை இருக்காது. ஆனால், அவர்களுக்கு மற்ற அனைத்து உரிமைகளும் இருக்கும். வேலைபார்ப்பது, கல்வி கற்பது, வர்த்தகம் செய்வது என அனைத்திலும் ஈடுபடலாம்.

சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள் வாக்களிக்கலாம். இதுபோன்றுதான் மற்ற நாடுகளில் உள்ளது. இந்தியாவில் மட்டும ஏன் கூடாது. இஸ்லாமிய நாடுகள் இந்துக்களுக்கு வாக்குரிமை அளிக்கிறதா. அதுமட்டுமல்லாமல் வாக்களிக்கும் உரிமை 16வயதிலேயே வழங்கிட வேண்டும், 25 வயதில் தேர்தலில் போட்டியிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லிக்கு பதிலாக வாரணாசி தலைநகராக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 32 பக்க வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டி கையேடு 750  பக்கங்களாக இருக்கும். 

இது தவிர கல்வி, சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு ஆகியவை பற்றியும், வேளாண்மையை வரியில்லாத துறையாகவும், குருகுலக் கல்வியை கட்டாயமாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வர்ணாஸ்ரம முறையும் சேர்க்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்


 

Follow Us:
Download App:
  • android
  • ios