புதுச்சேரி ஜிப்மரில் நடந்த புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சியில் நாள் ஒன்றுக்கு ரூ.2 செலவில் புற்றுநோயாளிகளுக்கு பசியின்மையை போக்கும் மருந்து கண்டறியப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஜிப்மரில் நடந்த புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சியில் நாள் ஒன்றுக்கு ரூ.2 செலவில் புற்றுநோயாளிகளுக்கு பசியின்மையை போக்கும் மருந்து கண்டறியப்பட்டுள்ளது. ஜிப்மர் நிர்வாகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இந்தியா தற்போது புற்றுநோய் பாதிப்புகளால் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறது. உலகளாவிய பிரச்சனையாகவும் உள்ள இந்த நோய்க்கு ஆராய்ச்சி மட்டுமே கை கொடுக்கிறது. புற்றுநோய் சிகிச்சை, மருந்துகள், அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை ஆகிய 3 முறைகளை கொண்டுள்ளது.
இவை அனைத்திலும் மருத்துவ முன்னேற்றத்திற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. மற்ற நாடுகளில் இந்த துறை சார்ந்த ஆய்வுகள் 20 – 30 ஆண்டுகளாக நடந்து வந்தாலும் இந்தியாவில் குறைந்த அளவு ஆராய்ச்சியே நடத்தப்படுகிறது. பல இடங்களில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாக சேர்ந்து செய்யும் ஆராய்ச்சிகளே சிகிச்சையில் மாற்றங்களை தரவல்லது.
ஏசியாநெட்தமிழ்செய்திகளைஉடனுக்குஉடன் Whatsapp Channel-லில்பெறுவதற்குகீழேகொடுக்கப்பட்டுஇருக்கும்லிங்குடன்இணைந்துஇருக்கவும்.
Click this link:https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதுபோன்ற ஆராய்ச்சிகளை இந்திய நாட்டில் அதிகரிப்பதால் ஆக்கப்பூர்வ சிகிச்சை முறைகளையும், மருந்துகளையும் கண்டுபிடிக்க உதவும். இதனை கருத்தில் கொண்டு பயோ டெக்னாலாஜி ஆராய்ச்சி உதவி மற்றும் மேம்பாட்டு கவுன்சில் நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள பங்களிப்பை கோரி உள்ளது.
இதன் ஒரு முயற்சியாக Network of Oncology Clinical Trials India என்ற கூட்டமைபு, ஜிப்மர் மருத்துவமனையை தலைமையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் 6 மருந்துவமனைகள் இடம்பெற்றுள்ள இந்த குழுஇல் ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக ரூ.9.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த குழு 6 வகை புற்றுநோய்களின் விவரங்களை பல தரப்பட்ட நோயாளிகளிடமிருந்து சேகரித்து வருகிறது. மேலும் இந்த குழு தங்கள் மருத்துவமனைகளில் ஆராய்ச்சியையும் தொடங்கி உள்ளது. அந்த வகையில் ஜிப்மர் மருத்துவமனையின் சமீபத்திய ஆராய்ச்சியில் நாள் ஒன்றுக்கு 2 ரூபாய் செலவில் புற்றுநோயாளிகளுக்கு பசியின்மையை போக்கும் மருந்து கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட் JN.1 : புதிய மாறுபாட்டிலிருந்து எப்படி உங்களைப் பாதுகாத்துக் கொள்வது ?
இந்த ஆராய்ச்சிக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பசியின்மையால் அவதிபட்டு வரும் கீமோதெரபி நோயாளிகளு இந்த மருந்தை அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜி பரிந்துரைக்கிறது. இதை தொடர்ந்து என்.ஒ.சி.ஐ குழு இதுபோன்ற ஆராய்ச்சி பரிசோதனைகளின் அவசியத்தை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் துண்டு பிரசுரங்கள் மூலம் எடுத்துரைத்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
