5 ஆண்டுகளில் 50 ராணுவ விமான விபத்துகள்! ராணுவ வீரர்கள் 55 பேர் பலி

5 ஆண்டுகளில் நடந்த 50க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் விபத்துக்களில் 55 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

In just over 5 years, 55 lives lost in 50 military aviation crashes

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'துருவ்' எனப்படும் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ALH) ஆறு மாதங்களில் நான்காவது பெரிய விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை மற்றொரு மிக்-21 போர் விமானமும் விபத்துக்குள்ளானது. இது இராணுவ விமானப் போக்குவரத்தில் விபத்துகள் அதிகரித்து வருவதைக் காட்டுவதாக உள்ளது.

ஐந்து ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் விபத்துக்களில் 55 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பழைய மிக்-21 ஜெட் விமானங்களும், சீட்டா / சேடக் ஹெலிகாப்டர்களும் பல ஆண்டுகளாக விபத்துகளில் சிக்கியுள்ளன.

மிக்-21 மற்றும் சீட்டா / சேடக் ஹெலிகாப்டர்கள் இரண்டும் ஒற்றை-எஞ்சின் இயந்திரங்களால் 1960களின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டவை. அவை நீண்ட காலமாக அவற்றின் செயல்திறனுக்கு அதிகமாகவே பயன்பட்டுள்ளன. புதிய விமானங்கள் இல்லாதபோது என்ன செய்ய முடியும்?" என பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

உயர்ந்த பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத பழைய ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள், விமானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு போதிய பயிற்சி இன்மை, மோசமான பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் நடைமுறைகள், உதிரிபாகங்களில் தரக் கட்டுப்பாடு இல்லாமை ஆகியவை விபத்துகள் அதிகரிக்க வழிவகுக்கும்.

"விமானிகள் / தொழில்நுட்பக் குழுவினர் செய்யும் பிழைகள்" மற்றும் "தொழில்நுட்பக் குறைபாடுகள்" ஆகியவை சுமார் 90 சதவீதம் விபத்துக்களுக்குக் காரணம். மேலும் சில விபத்துகள் வான்வெளி தாக்குதல்கள் போன்ற பிற காரணங்களால் ஏற்பட்டுள்ளன. விபத்துகளைத் தவிரிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"மேலும் விபத்துக்கள் விலைமதிப்பற்ற உயிர்களைப் பறிக்கும் முன் எதிர்காலத்தில் விமானங்களின் தரம் மற்றும் அளவு இரண்டும் அதிகரிக்கப்பட வேண்டும்” என முன்னாள் கடற்படை விமானி மற்றும் சோதனை பைலட் தளபதி கே.பி. சஞ்சீவ் குமார் தெரிவிக்கிறார்.

ஆயுதப் படைகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக காலாவதியான சீட்டா மற்றும் சேடக் ஹெலிகாப்டர்களுக்குப் பதிலாக 498 புதிய இலகு ரக ஹெலிகாப்டர்களைக் கோருகின்றன. ஆனால் அந்த எதிர்பார்ப்பு இன்னும் நிறைவேறவில்லை. இதனால், இந்திய விமானப் படை ரஷ்ய தயாரிப்பான சேர்ந்த மிக்-21 விமானங்களை இயக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இவை 1963 இல் இந்திய விமானப் படையால் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் சூப்பர்சோனிக் போர் விமானங்கள் ஆகும். இவை பின்னர் மேம்படுத்தப்பட்டன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் இலகுரக போர் விமானங்கள் பயன்பாட்டுக்கு வருவதும் தாமதப்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios