In India the radical system has failed in the foot of terrorism by rajnath sing

உலகிலேயே அதிகமான முஸ்லிம்கள் வாழும் நாடு இந்தியா என்கிறபோதிலும், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு, இந்தியாவில் காலூன்ற முடியாமல், தோல்வி அடைந்துவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்தோடு தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பு ஏற்று 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த ஆட்சியில் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து மதிப்பீடுகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது-

பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதாகட்சி ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து நாட்டுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பை, முழுப்பொறுப்புடன் அளிக்கிறோம். கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியோடு ஒப்பிடுகையில், 2014முதல் 2017ம் ஆண்டு வரை நக்சலைட்டுகள் தாக்குதல் 25 சதவீதம் குறைந்துள்ளது. எங்களின் ஆட்சியில் நக்சலைட்டுகள் தாக்குதல்கள் மூலம் உயிரிழப்பவர்களின் சதவீதத்தையும் 42 சதவீதம் குறைத்துள்ளோம்.

அதுமட்டுமல்லாமல், இந்தியாவுக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவல்களையும் 45 சதவீதம் குறைத்துள்ளோம். அதிலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சர்ஜிகல் ஸ்டிரைக் நடவடிக்கைக்கு பின் ஊடுருவல்கள் குறைந்துள்ளன.

பாகிஸ்தான் ஆதரவில் அதிகரித்துவரும் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்து,ஜம்மு-காஷ்மீரில் முழுமையான அமைதியை உறுதியாகக் கொண்டு வரும்.

நாடுமுழுவதும் இதுவரை 90 ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவானவர்களை கைது செய்து இருக்கறோம். இதில் ஐ.எஸ். தீவிரவாதி அன்சர் உல் அம்மா உள்ளிட்டோரும் அடக்கம்.

உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமான முஸ்லிம் மக்கள் வாழ்ந்துவந்தபோதிலும், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இங்குகலான்றுவதில் தோல்வி அடைந்துவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.