Asianet News TamilAsianet News Tamil

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு: இந்தியாவில் 11,109 பேருக்கு கொரோனா தொற்று; ஒரே நாளில் 29 பேர் பலி!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது வரையில் 11,109 க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 29 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

In India 11,109 people infected with corona virus; 29 people died
Author
First Published Apr 14, 2023, 10:48 AM IST

கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா தாக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படது. வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலையும் ஏற்பட்டது. கொரோனாவின் தீவிர பாதிப்பால் உறவினர்கள் நண்பர்களையும் இழந்து தவித்தனர். இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். இந்தநிலையில் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அமைச்சர் முருகன் வீட்டில் நடந்த தமிழ் புத்தாண்டில் பிரதமர் மோடி கலந்து கொண்ட வீடியோ தொகுப்பு!!

இந்தியாவை பொறுத்த வரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 500க்கும் கீழ் கொரோனா பாதிப்ப உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் தனது கோர தாண்டவத்தை கொரோனா காட்ட தொடங்கியுள்ளது. புதிதாக 11,109க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று முன் தினம், ஒரே நாளில் மட்டும் 7830 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 10,158 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மொத்தம் 18 வழக்குகள் இருக்கு! ஸ்ட்ரைட்டா எலக்‌ஷன் கமிஷன் ஆபீஸ் படியேறிய ஓபிஎஸ் ஆதரவாளர்! நெருக்கடியில் EPS?

இதில், சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4,42,16,583 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக கொரோனா தொற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 98.71 சதவிகிதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலமாக கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,1064 ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவலை சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவில் இணைகிறாரா நடிகை ராதிகா? டெல்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!!

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தாலும் உயிரிழப்பு விகிதம் குறைவாக இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருந்த போதும் தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா கிளெஸ்டர் பாதிப்பாக ஏற்படவில்லையென்றும் தனி, தனியாகத்தான் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள முககவசம் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்... இன்று பிஹூ! கலாச்சார நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மோடி

இதுவரையில் தமிழகத்தில் குழு பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறி வந்த நிலையில், கோயம்புத்தூரில் உள்ள தொழில் நிறுவனத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட்ய்ள்ளது. பள்ளியில் மாணவர்களுக்கு மத்தியில் கொரோனா தொற்று பரவல் எளிதில் நடக்கும். அவர்களுக்கு பாதிப்பு இல்லையென்றாலும் கூட, பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது கூட அவர்களால் இணை நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள வயது முதிர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இவ்வளவு ஏன், மாணவர்களால் தொற்று ஏற்பட்ட வயதானவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5ஆம் வகுப்பிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios