டெல்லியில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தையை தூக்கிச் சென்று கற்பழித்த இளைஞனை பொது மக்கள் அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைந்ததனர்.

புதுடெல்லி பிரீத் விஹார் பகுதியில் ராஜு – சிந்தியா தம்பதிகள் வசித்து வந்தனர். ராஜு அருகில் உள்ள என்ஜீனியரிங் கம்பெனியில் பணி புரிந்து வருகிறார். நேற்று வழக்கம் போல் ராஜு வேலைக்கு சென்றுவிட்டார்.

அவரது மனைவி சிந்தியா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். இந்த தம்பதிகளின் ஒரு வயது குழந்தை  சாந்தினி வீட்டுவாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த அஸ்லம் என்பவன், ஒரு வயது குழந்தையை தனது அறைக்கு தூக்கிச் சென்று கற்பழித்துள்ளான்.

அப்போது அந்த குழந்தை கதறித்துடித்து சத்தமிட்டு அழுதுள்ளாள். உடனடியாக அந்த அறைக்குச் சென்ற சிந்தியா மற்றும் அக்கம் பக்கத்தைச் சேர்ந்தவர்கள்,பதறிப் போனார்கள். அஸ்லத்திடம் இருந்து குழந்தையை விடுவித்த பொது மக்கள் அவனுக்கு சரமாரியாக தர்ம அடி கொடுத்தனர்.இதைத் தொடர்ந்து அவனை பொது மக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் பிரீத் விஹார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.