Asianet News TamilAsianet News Tamil

Covid News: கொரோனா பயம்! 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்த தாய், இளம் பெண் மீட்பு

ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தில் கொரோனாவுக்கு பயந்து கடந்த 3 ஆண்டுகளாக தாயும், மகளும் வீட்டைவிட்டு வெளியே வராமல், வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் வினோதம் நடந்துள்ளது.

In Andhra Pradesh,in Kakinada a mother and her daughter have been isolated for three years.
Author
First Published Dec 21, 2022, 12:39 PM IST

ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தில் கொரோனாவுக்கு பயந்து கடந்த 3 ஆண்டுகளாக தாயும், மகளும் வீட்டைவிட்டு வெளியே வராமல், வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் வினோதம் நடந்துள்ளது.

காக்கிநாடா மாவட்டத்தில் குய்யேரு கிராமத்தைச் சேர்ந்தவர் கர்நீதி சுரிபாபு. இவரின் மனைவி கர்நீதி மணி. இவரின் 20வயது மகள் துர்கா பவானி. கொரோனா காலத்தில் ஏற்பட்ட பயம் காரணமாகவும், தங்களை யாரேனும் கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தாலும், துர்கா பவானியும், அவரின் தாய் கர்நீதி மணியும் கடந்த 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே கதவைப்பூட்டிக்கொண்டு வாழ்ந்தனர்.

கோவிட் ரூல்ஸ் முக்கியம் அல்லது யாத்திரையை நிறுத்துங்கள்:ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கடிதம்

இருவரின் உடல்நிலையும் நாளுக்கு நாள் மோசமடைந்து வந்ததால், கர்நீதி மணியின் கணவர் கர்நீதி சுரிபாபு உள்ளூர் அரசு மருத்துவமனை, காவல் நிலையத்தின் உதவியை நாடினார்.

இதையடுத்து, போலீஸாரும், சுகாதாரத்துறையும் இணைந்து களத்தில் இறங்கி, கர்நீதி மணியையும், அவரின் மகள் பவானியையும் நேற்று வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்து, காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

கர்நீதி மணியும், அவரின் மகள் பவானியும்கடந்த 3 ஆண்டுகளாக ஒரே போர்வையில்தான் படுத்து தூங்கியுள்ளனர். 

கர்நீதி மணியின் கணவர் சுரிபாபு கூறுகையில் “ என் மனைவியும், மகளும் எப்போதாவதுதான் வீட்டைவிட்டு வெளியே வருவார்கள். நான் உணவு சமைத்து இருவருக்கும் ஜன்னல் வழியாக வழங்குவேன். கடந்த சில மாதங்களாக என்னை ஜன்னல் வழியாக உணவு வழங்கவும் இருவரும் அனுமதிக்கவில்லை.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்... அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்!!

இதனால் வேறு வீட்டில் நான் தங்கிக்கொண்டு அங்கு சமையல் செய்து உணவுகளைஎடுத்து கதவின் அருகே வைத்துவிடுவேன், அவர்கள் எடுத்துக்கொண்டு செல்வார்கள்.

ஆனால், இருவரின் உடல்நிலையும் நாளுக்குநாள் மோசமடைந்து வந்தது, இருவரும் வீட்டைவிட்டு வெளியேவராமல், மனரீதியாக  பாதிக்கப்பட்டிருந்தார்கள். இதையடுத்து, சுகாதாரத்துறையின் உதவியை நாடி இருவருக்கும் சிகிச்சை அளிக்க முடிவு செய்தேன்.

இருவரும் தங்களை யாரோ கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தால் வீட்டைவிட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்தனர். 

டெல்லியில் ரயிலை எண்ணும் வேலையாம்! தமிழகத்தைச் சேர்ந்த 25 இளைஞர்களிடம் ரூ.2.60 கோடி மோசடி

இதையடுத்து அரசு மருத்துவர் சுப்ரியா ஒரு மருத்துவக் குழுவினரையும், சுகாதார ஊழியர்களையும் அனுப்பி என் மனைவி, மகளையும் வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்தனர்.  கடந்த 3 ஆண்டுகளாக வீடு பூட்டியே இருந்ததால், துர்நூற்றம் வீசியது. குலாபள்ளம் போலீஸாரின் உதவியுடன் இருவரும் அரசு மருத்துவமனையில் மனநிலை பிரிவில் சேர்க்கப்பட்டனர். இருவரும் மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளனர். 

இவ்வாறு சுரிபாபு தெரிவித்தார்


 

Follow Us:
Download App:
  • android
  • ios