ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய ராணுவம் மற்றும் கடற்படை தளபதிகள் இருவரும் ஒரே பள்ளியில் படித்த நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி இருவரும் சைனிக் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது. வியாழக்கிழமை பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடந்த முயன்று தோல்வி அடைந்தது. இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் பாகிஸ்தான் டிரோன்களையும் ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்தது.
இந்தியக் கடற்படையும் கராச்சிக்கு அருகில் அரபிக்கடலில் ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உள்ளிட்ட போர் விமானங்களை நிறுத்திவைத்துள்ளது. இதன் மூலம் கடற்படையும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. இந்திய ஆயுதப் படையின் முப்படைகளும் எதிரிகளின் தாக்குதலை முறியடிக்க ஆயத்தமாக உள்ளன.
இந்நிலையில், ராணுவத்தின் இந்த நடவடிக்கையில் சிறுவயதில ஒன்றாகப் பள்ளியில் படித்த இரண்டு மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய ராணுவத் தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதியும் இந்தியக் கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியும் சைனிக் பள்ளியில் ஒன்றாகப் படித்துள்ளனர்.
ஜெனரல் உபேந்திர திவேதி:
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி 2024ஆம் ஆண்டு ஜூலையில் பொறுப்பேற்றார். அவர் தெற்குத் தொகுதியின் முதல் தளத்தில் உள்ள ராணுவத் தளபதி அலுவலகத்தில் அவர் பணியாற்றி வருகிறார். அவரது பால்ய கால நண்பரும் வகுப்புத் தோழருமான அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி கடற்படைத் தளபதியாக இருக்கிறார்.
கடற்படைத் தளபதி தினேஷ் குமார் திரிபாதி மற்றும் ராணுவத் தளபதி உபேந்திர திவேதி இருவரும் ஒரே பள்ளியில் பயின்றனர். பள்ளி நாட்களில் இருந்தே அவர்கள் இடையே வலுவான நட்பு உள்ளது. இப்போது நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய அவர்கள் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.
ஜெனரல் திவேதி மற்றும் அட்மிரல் திரிபாதி இருவரும் 1973 முதல் 1981 வரை மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரேவாவில் சைனிக் பள்ளி மாணவர்களாக இருந்தனர். ஒரே பள்ளியைச் சேர்ந்த இரண்டு வகுப்பு தோழர்கள் இந்திய ஆயுதப் படைகளின் முக்கியமான பிரிவுகளில் உயர் பதவிகளை எட்டியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் ரைபிள்ஸ் படைப்பிரிவின் முதல் ராணுவத் தலைவராகவும் ஜெனரல் உபேந்திர திவேதி உள்ளார். இந்தப் படைப்பிரிவு முன்பு ஜம்மு-காஷ்மீர் அரச குடும்ப டோக்ரா இல்லத்தின் பாதுகாப்புப் படையாக இருந்தது. இது 1957 இல் இந்திய ராணுவத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது.
அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி:
ஜெனரல் திவேதி ரேவா மாவட்டத்தில் உள்ள கர் உடியா கிராமத்தைச் சேர்ந்தவர், அதே நேரத்தில் அட்மிரல் திரிபாதி சாட்னாவைச் சேர்ந்தவர். ஜெனரல் திவேதி ஆரம்பகால பள்ளிப்படிப்பை ராய்ப்பூரில் மேற்கொண்டார். அது அப்போது மத்தியப் பிரதேசத்தில் இருந்தது, ஆனால் இப்போது சத்தீஸ்கரில் உள்ளது. ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு, அவர் சைனிக் பள்ளியில் ரேவாவில் சேர்ந்தார். அங்கு அவர் 1973 முதல் 1981 வரை 12ஆம் வகுப்பு வரை படித்தார். அட்மிரல் திரிபாதியும் அதே வகுப்பில் இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர்களின் நட்பு வலுவடைந்தது. பின்னர், திரிபாதி கடற்படையிலும், திவேதி ராணுவத்திலும் சேர்ந்துள்ளனர்.
ஜெனரல் திவேதி டிசம்பர் 15, 1984 அன்று இந்திய ராணுவத்தின் ஜம்மு மற்றும் காஷ்மீர் ரைபிள்ஸில் சேர்ந்தார். ஜூலை 1, 1964 இல் பிறந்த ஜெனரல் உபேந்திர திவேதி, ஜெனரல் மனோஜ் பாண்டேவுக்குப் பிறகு 30வது ராணுவத் தளபதியாக பதவியேற்றுள்ளார். அவர் 2022 முதல் 2024 வரை வடக்கு கமாண்ட்டின் தலைமைத் தளபதியாகவும் பணியாற்றினார்.
ராகேஷ் திரிபாதி ஜூலை 1, 1985 இல் இந்திய கடற்படையில் சேர்ந்தார். திரிபாதி 1973 முதல் 1981 வரை ரேவாவின் சைனிக் பள்ளியில் பயின்றார். 1981 இல் பட்டம் பெற்றார். பின்னர், கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்றார். கடற்படையில் பயிற்சி பெற்றார். ஜூலை 1, 1985 இல் கடற்படையில் சேர்ந்தார். 2024 ஏப்ரல் 30ஆம் தேதி கடற்படைத் தளபதியானார்.


