ஐந்து  வருஷத்தில் 70 லட்சம் பேருக்கு கண்டிப்பா வேலை கிடைக்கும்….யோகி ஆதித்யநாத் அதிரடி அறிவிப்பு…

5 ஆண்டுகளில் 70 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க உத்தரப் பிரதேச அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றுக் கொண்டபின்  பல அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார்.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, அரசு அலுவலகங்களில் ஒழுங்கு போன்ற நடவடிக்கைகள் பொது மக்களிடையே வரவேற்பைப்  பெற்றுள்ளன.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேச மாநிலம் ஏராளமான வாய்ப்புகள் உள்ள மாநிலம். தொழில்சார் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறைகள் மூலம் 10 லட்சம் வேலைகளை உருவாக்க முடியும் என்று தெரிவித்தார். வரும் 5 ஆண்டுகளில் 70 லட்சம் பேருக்கு வேலை வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் அவர் கூறினார். 

இந்த இலக்கை அடைய, விவசாயம், பால், சிறு தொழில் மற்றும் தொழில்துறை மேம்பாட்டு துறைகளில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு நன்மைகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்றும் யோகி கூறினார்.

இந்த உலகில் யாரும் பயனற்றவர்கள் இல்லை என்றும்,  இளைஞர்களிடம் உள்ள திறமையை அவர்கள் உணரச் செய்து சரியாக வழிநடத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.