Tirupati: மலையப்பனை நினைத்து மலைக்காதிங்க! திருப்பதி கோயில் 2022-ல் பக்தர்களின் உண்டியல் காணிக்கை தெரியுமா?
திருப்பதி ஏழுமலையான் வெங்கடாஜலபதி கோயிலில் கடந்த 2022ம் ஆண்டில் பக்தர்கள் ரூ.1450 கோடி காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் வெங்கடாஜலபதி கோயிலில் கடந்த 2022ம் ஆண்டில் பக்தர்கள் ரூ.1450 கோடி காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது
11 நாட்கள் தலைமறைவு! ‘சான்ட்ரோ’ ரவியை குஜராத்தில் கைது செய்தது கர்நாடக போலீஸார்
“. 2021ம் ஆண்டில் மட்டும் உண்டியல் காணிக்கையாக மட்டும் ரூ.833.41 கோடி வந்தது 1.04 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தார்கள்.
ஆனால், கடந்த 2022ம் ஆண்டில் திருமலை திருப்பதிக்கு 2.37 கோடி பக்தர்கள் வந்து தரிசனம் செய்துள்ளனர், இதன்மூலம் உண்டியல் காணிக்கையாக ரூ.1,450.50 கோடி வந்துள்ளது. 2021ம் ஆண்டையும் 2022ம் ஆண்டையும் ஒப்பிட முடியாது, கடந்த 2021ம் ஆண்டில் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால், கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.
இதில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் ரூ.129.37 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது, அந்த மாதத்தில் மட்டும் 20.25 லட்சம் பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்தனர். 2023ம் ஆண்டுஜனவரி 11ம் தேதிவரை 6 லட்சம் பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்துள்ளனர், உண்டியல் காணிக்கையாக ரூ.39.40 கோடி வசூலாகியுள்ளது.
விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த வழக்கு.. நான் அவன் இல்லை.! நீதிமன்றத்தில் பரபரப்பு
2022ம்ஆண்டில் மட்டும் லட்டு பிரசாதமாக ரூ.11.54 லட்சத்துக்கு விற்பனையானது, 2021ம் ஆண்டில் ரூ.5.96 லட்சத்துக்கு மட்டுமே லட்டு பிரசாதம் விற்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக லட்டுபிரசாத விற்பனையும் பாதிக்கப்பட்டது
இவ்வாறு தர்மா ரெட்டி தெரிவித்தார்