வான் வழி தாக்குதலின் போது சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்.

அபிநந்தனை விடுவிக்க, பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்ததும் முக்கிய காரணம் என கூறப்படுகிகிறது. இந்த விஷயத்தில் ஒரு நாடாவது பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்குமா என யோசனை கூட செய்ய முடியாத அளவிற்கு ரஷ்யா,சீனா,அமெரிக்கா,அரேபிய  நாடுகள் இந்தியாவிற்கு பெரும் ஆதரவு கொடுத்தது 

இந்த நிலையில் வேறு வழி இல்லாமல், அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு வந்தது பாகிஸ்தான். அவ்வாறே ஒப்படைத்து விட்டது. இருந்தாலும், அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் விடுவிக்கபட உள்ளது என இம்ரான்கான் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இம்ரான்கானின் இந்த நடக்கடிகைக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தது. உலக நாடுகளும், இம்ரான் கானை ட்விட்டர் மூலமாக பாராட்டி தள்ளினார். இதனை தொடர்ந்து இம்ரான்கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தானிய மக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். இது தொடர்பாக சமுக வலைத்தளங்களில், இம்ரான் கானுக்கு ஆதரவாக ஹேஷ்டேகுகள் பிரபலம் அடைந்தன 

#NobelPeacePrizeForImranKhan, #PakistanLeadsWithPeace மற்றும் #ThankYouImranKhan இந்த ஹேஷ்டேகுகள் பிரபலம் அடைந்தன. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்கில், கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான், ”நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை"..காஷ்மீர் மக்களின் நிம்மதிக்கு வழி வகுத்து கொடுப்பவரே நோபல் பரிசு பெற தகுதி பெற்றவர்” என பதிவிட்டு உள்ளார்.