மாநிலங்களவையில் இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி. பதவி ஏற்கவில்லை... காரணம் இதுதான்!!
மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டோர் பதவியேற்றுக் கொண்ட நிலையில் அதில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டோர் பதவியேற்றுக் கொண்ட நிலையில் அதில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான காரணமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 நியமன உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு: அக்னிபாத், ஜிஎஸ்டி குறித்து காங். எம்.பி்கள் அமளி
அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பி.டி.உஷா, தா்மசாலா கோயில் நிா்வாக அறங்காவலா் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளா் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் தொடங்கியது. இதை அடுத்து மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.
இதையும் படிங்க: அடிதூள். போட்ரா வெடிய.. எம்பி ஆகிறார் இசைஞானி இளையராஜா; பிரதமர் மோடி வாழ்த்து
அப்போது மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, இளையராஜா என்று கூப்பிட்டவுடன் அவையில் இருந்த அனைவரும் கைத்தட்ட தொடங்கினர். ஆனால், இளையராஜா இன்று அவைக்கு வராததை பின்னர் அறிந்த உறுப்பினர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேபோல், தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள பி.டி. உஷாவும் இன்று பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. இளையராஜா அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றுள்ளதால், அவரால் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை எனக் கூறப்படுகிறது.