Asianet News TamilAsianet News Tamil

இனி ரோட்டில் துப்பினால் நீங்களே துடைக்கணும்... நூதன தண்டனை!!

சாலையில் எச்சில் துப்பினால் அபராதம் செலுத்துவதுடன், அவரே தனது எச்சிலை சுத்தம் செய்யவேண்டும் என புனே மாநகராட்சி நூதன தண்டனையை அறிமுகப்படு்த்தியுள்ளது.

If you spit on Pune streets...clean it up
Author
Pune, First Published Nov 12, 2018, 11:44 AM IST

சாலையில் எச்சில் துப்பினால் அபராதம் செலுத்துவதுடன், அவரே தனது எச்சிலை சுத்தம் செய்யவேண்டும் என புனே மாநகராட்சி நூதன தண்டனையை அறிமுகப்படு்த்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள புனே நகரை சுத்தமாக வைத்திருப்பதற்காக மாநகராட்சி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், மாநகராட்சி சுகாதார நடவடிக்கையின் ஒரு அங்கமாக சாலையில் துப்பினால், அபராதம் விதிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது, அபராதத்துடன், துப்பியதை சுத்தம் செய்யும் தண்டனையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. If you spit on Pune streets...clean it up

இது தொடர்பாக உயரதிகாரி ஒருவர் கூறுகையில் இந்தியாவில் பல்வேறு நகரங்கள் சுகாதாரமின்றி சீரழிந்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு புனே மாநகராட்சியில் உள்ள சாலைகளை சுத்தமாக வைக்க முடிவு எடுக்கப்பட்டது. If you spit on Pune streets...clean it up

துாய்மையான நகரங்களுக்கான பட்டியலில், இந்தாண்டு, 10-வது இடத்தைப் பிடித்தோம். வரும், 2019-ம் ஆண்டில் துாய்மையான நகரங்களுக்கான போட்டியில் முதலிடத்தைப் பிடிக்கும் முனைப்பில் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என கூறியுள்ளார். கடந்த 8 நாட்களில் மட்டும் இந்த பகுதிகளில் சாலையில் எச்சில் துப்பிய 156 பேர் மாநகராட்சியினரால் பிடிக்கப்பட்டனர். அவர்கள் துப்பிய எச்சில், அவர்களை கொண்டே சுத்தம் செய்ய வைக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து தலா ரூ.150 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. If you spit on Pune streets...clean it up

தவறு செய்தவர்கள் தங்கள் எச்சிலை தாங்களே சுத்தம் செய்யும்போது கேவலமாக கருதப்படுவார்கள். ஆகையால் அடுத்தது இதுபோல தவறுகளை செய்யமாட்டார்கள் என்று உயரதிகாரி கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios