Asianet News TamilAsianet News Tamil

மூன்று நாள் தான் அனுமதி - ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு

If you have an unofficial payment of money from a bank or a debit card
If you have an unofficial payment of money from a bank or a debit card
Author
First Published Jul 6, 2017, 10:28 PM IST


வங்கிக்கணக்கில் இருந்தோ அல்லது டெபிட் கார்டில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற வகையில் பணம் திருடப்பட்டால், 3 நாட்களுக்குள் வங்கியில் புகார் அளித்தால், அடுத்த 10 நாட்களுக்குள் அந்த பணம் வங்கிக்கணக்கில் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று  ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

‘வாடிக்கையாளர் பொறுப்பு-அதிகாரப்பூர்வ மற்ற வங்கிப் பரிமாற்றத்தில் வாடிக்கையாளர் பொறுப்பு’ என்ற விதிமுறைகளை திருத்தி ரிசர்வ் வங்கி நேற்று அறிக்கை வௌியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

வாடிக்கையாளர் ஒருவர் அவரின் தவறுதல், கவனக்குறைவு காரணமாக, பணத்தை வேறுயாருக்காவது அனுப்பிவிட்டால், அதனால், ஏற்படும் இழப்பு ஒட்டு மொத்தத்தையும் வாடிக்கையாளரே சுமக்க வேண்டும்.

வங்கிக்கணக்கில் இருந்தோ அல்லது டெபிட் கார்டில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற வகையில் பணம் திருடப்பட்டால், 3 நாட்களுக்குள் வங்கியில் புகார் அளித்தால், அடுத்த 10 நாட்களுக்குள் அந்த பணம் வங்கிக்கணக்கில் திரும்ப ஒப்படைக்கப்படும்

அதே சமயம், மூன்றாம் நபர் மூலம் நடக்கும் மோசடி குறித்து தாமதமாக அதாவது 4 முதல் 7 நாட்களுக்குள் புகார் அளித்தால், ரூ.25 ஆயிரம் வரை உள்ள  பணத்துக்கு மட்டுமே வாடிக்கையாளர் புகார் அளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

வங்கிக்கணக்கு மோசடி குறித்து 10 நாட்களுக்கு பின் வாடிக்கையாளர் வங்கியில் புகார் அளித்தால், அது குறித்து வங்கியின் வாரியக்குழுதான் முடிவு செய்யும். அந்த விவகாரத்தில் வாடிக்கையாளர் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் இழப்புவரை மட்டுமே அனுக முடியும்.

ஆதலால் ஒவ்வொரு வாடிக்கையாளரும்  வங்கியில் தங்களின் செல்போன் எண், மின் அஞ்சல் முகவரியை கொடுத்து வைத்து இருப்பது கட்டாயமாகும். அதன்மூலம் தங்களைத் தவிர வேறுயாராவது வங்கிக்கணக்கை பயன்படுத்தும்போது, எச்சரிக்கை செய்ய முடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios