விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்தால், சர்க்கரை நோய்க்கு வழி வகுத்துவிடும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கிண்டலாக பேசியுள்ளார்..

உத்தரபிரதேசம் அருகே பக்பத்-ல் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அவர், விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்வதை விட்டு விட்டு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட மாற்றுப் பயிர்களை பயிரிடலாம் என யோகி ஆதித்யநாத் கூறினார்.

அதிகப்படியாக கரும்பு சாகுபடி செய்தால் சர்க்கரை நோய் வந்துவிடும் என அவர் நகைச்சுவையாக கூறியதற்கு, கூட்டத்தில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

உத்தரபிரதேசத்தில் கரும்பு நிலுவை தொகை வேகமாக விடுவிக்கப்பட்டு வருகிறது என்றும், தற்போது 10 ஆயிரம் கோடி ரூபாயக இருக்கும் நிலுவைத் தொகை வரும் அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் முழுமையாக வழங்கப்ட்டு விடும் என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.