இந்தியாவில் வாழ வேண்டுமானால் பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்ல வேண்டும்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

'பாரத் மாதா கி ஜே' என்று சொல்லாத, இந்துஸ்தான் மற்றும் பாரதத்தின் மீது நம்பிக்கை இல்லாத, ஒருவர் இருந்தால், அவர் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என்று மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கூறியுள்ளார்.

If Want To Live In India, Have To Say Bharat Mata Ki Jai: Union Minister Kailash Choudhary sgb

இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று சொல்ல வேண்டும் என்று மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி பேசியிருக்கிறார். தெலுங்கானாவில் சனிக்கிழமை பாஜக நடத்திய விவசாயிகள் மாநாட்டில் பேசிய விவசாயத்துறை இணை அமைச்சர் சவுத்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பான கிருஷ்ணா நதிநீர் விவகார தீர்ப்பாயத்தின் விதிமுறைகளுக்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதனை அடுத்து விவசாயிகள் மாநாட்டுக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் கைலாஷ் சௌத்ரி பங்கேற்றார்..

மாநாட்டில் பேசிய அமைச்சர் கைலாஷ், "தெலுங்கானாவில் தேசியவாத சிந்தனை கொண்ட அரசாங்கம் மாநிலத்தில் அமைக்கப்பட வேண்டும். தேசியவாத சித்தாந்தம் நாட்டிற்கு அவசியம். கூட்டு முயற்சிகளால் நாட்டை பலப்படுத்த வேண்டும்" என்று கூறினார்.

இந்தியாவில் 'பாரத் மாதா கி ஜெய்' என்று கோஷமிடமாட்டோம் என்று கூறுபவர்கள் நரகத்திற்குத் தள்ளப்படுவார்கள் என்று தெரிவித்த அவர், "இந்தியாவில் வாழ விரும்பினால், 'பாரத் மாதா கி ஜெய்' என்று சொல்ல வேண்டும்" என்றார். "இந்தியாவில் வசிக்கும் நீங்கள், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று சொல்வீர்களா" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

'வந்தே மாதரம் ', 'பாரத் மாதா கி ஜெய்' என்று சொல்பவர்களுக்கு மட்டுமே நாட்டில் இடம் உண்டு எனவும் அமைச்சர் சௌத்ரி பேசியிருக்கிறார். 

தொடர்ந்து பேசிய அவர், "அதனால்தான் நான் சொல்ல விரும்புகிறேன், 'பாரத் மாதா கி ஜே' என்று சொல்லாத, இந்துஸ்தான் மற்றும் பாரதத்தின் மீது நம்பிக்கை இல்லாத, 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவர் இருந்தால், அவர் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும். இங்கு இருக்கத் தேவையில்லை" என்றார்.

எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டியிருப்பதைக் குறிப்பிட்டுப் பேசிய சவுத்ரி, காங்கிரஸ்காரர்கள் முதலில் மகாத்மா காந்தியின் பெயரைத் திருடினார்கள் என்று குற்றம்சாட்டினார். அதற்கு முன் நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்காக முதலில் உருவாக்கப்பட்ட 'காங்கிரஸ்' என்ற பெயரையும் அவர்கள் அபகறித்துவிட்டார்கள் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios