இந்தியாவில் நல்லது நடந்தால் இப்படித்தான் பேசுவாங்க: இடதுசாரிகள் பற்றி ராஜீவ் சந்திரசேகர் கருத்து
இந்தியாவில் ஏதேனும் நல்லது நடந்தால் இடதுசாரி ஆதரவாளர்கள் எவ்வாறு பேசுவார்கள் என்று மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கிண்டல் செய்துள்ளார்.
இந்தியாவில் ஏதேனும் நல்லது நடந்தால் இடதுசாரி ஆதரவாளர்கள் எவ்வாறு பேசுவார்கள் என்று மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கிண்டல் செய்துள்ளார்.
டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம் அமெரிக்காவின் போயிங் நிறுவனம், பிரான்ஸின் ஏர் பஸ் நிறுவனத்திடம் இருந்து 840 விமானங்களை வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 370 விமானங்கள் தேவையின் பொருட்டு வாங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
திமுக கவுன்சிலரால் அடித்துக்கொல்லப்பட்ட ராணுவ வீரர்... மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கண்டனம்!!
ஒட்டுமொத்தத்தில் ஏர் இந்தியா நிறுவனம் 250 ஏர் பஸ் விமானங்களையும், 220 போயிங் விமானங்களையும் வாங்க இருக்கிறது. இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ட்வீட் செய்துள்ளார். அதில், இந்தியாவில் ஏதேனும் நல்ல நிகழ்வுகள் நடந்தால் இடதுசாரி ஆதரவாளர்கள் எவ்வாறு நடப்பார்கள் என்பதையும் குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இந்தியாவில் ஏதேனும் நடந்தால் இப்படித்தான் இடதுசாரி ஆதரவாளர்கள் நடந்து கொள்வார்கள். இந்தியாவின் இடதுசாரிகள் குறித்த நகைச்சுவையான தொகுப்பு” எனக் குறிப்பிட்டு ஒரு ட்விட்டர் இணைப்பையும் பகிர்ந்துள்ளார்.
அதில் “ ஏர்இந்தியா 470 போயிங் மற்றும் ஏர் பஸ் விமானங்களை வாங்க உள்ளது.
ராணா அயுப்: மோடியின் இந்தியா அதிகமான ஜெட் விமானங்களை வாங்கி, ஓசோன் படலத்தை அழிக்கப் போகிறது
அர்பா : இஸ்லாம் குறித்த அச்சத்தால், இஸ்லாமிய நாடுகளில் இருந்து போயிங் விமானங்களை வாங்கமாட்டார்கள்.
ரோமிலா தாப்பர்: போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகியவை முகலாய விமான பயணத்திலிருந்து உத்வேகம் பெற்றன.
ராஜ்தீப் சர்தேசாய்: நமது அண்டை நாடு பாகிஸ்தான் பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் போது நாம் போயிங் ஜெட் விமானங்கள் வாங்குவது சரியானதா
Opinion: தீ்ர்ப்புகளும்-ஆளுநர் பதவிகளும்-ஓர் பார்வை
ஆட்ரே ட்ருஸ்கே: வணிகரீதியான விமானங்கள் என்ற கருத்தை முதன்முதலில் கொண்டுவந்தது அவுரங்கசீப்தான்.
ராகுல் காந்தி: பாண்டவர்கள் ஒருபோதும் அதிகமான ஜெட் விமானங்களை வாங்கவில்லை, ஏனென்றால் அவர்கள் வனத்தில் இருந்தார்கள்.”
எனத் தெரிவி்க்கப்பட்டுள்ளது.