if i decide to be cm it will happen within a minute said hema malini

நான் நினைத்தால் அடுத்த நிமிடத்தில் முதல்வர் ஆகுவேன்...! அதிரடி காட்டும் ஹேமா மாலினி ..!

நான் நினைத்தால் எந்த நேரத்திலும் முதல்வர் ஆகுவேன், ஆனால் எனக்கு அதில் ஆர்வம் இல்லை என, செய்தியாளர் சந்திப்பின் போது நடிகையும் எம்பியுமான ஹேமா மாலினி தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து பேசிய ஹேமா மாலினி, “மதுரா எம்பியாக பதவியேற்று கடந்த நான்கு ஆண்டுகளாக கடுமையாக உழைத்து வந்தேன்... இங்குள்ள ப்ரிஜ்வாசி மக்களின் வளர்சிக்காக பாடுபடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது..என்று தெரிவித்தார்

இதற்கிடேயே,பிரதமர் நரேந்திர மோடியை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்காக அரும்பாடுபட்டு வருவதாகவும்,பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை அறிமுகம் செய்து வைத்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்

இந்த அளவிற்கு நாட்டு மக்களுக்காக அயாராது உழைக்கும் பிரதமர் வேறு யாரும் இருக்க முடியாது.

ஹேமா மாலினியின் இந்த பேச்சு, இந்திய அளவில் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.