if govt staffs involved in corruption he will get passport

இனி பாஸ்போர்ட் கிடையாது...மத்திய அரசு அதிரடி....!

ஊழல் வழக்குகளில் சிக்கும் நபர்கள் பொதுவாகவே வங்கிகளில் அதிக அளவில் பணத்தை பெற்றுக்கொண்டு, வேறு நாட்டிற்கு சென்று விடுகின்றனர்.

பின்னர் அவர்களின் பாஸ்போர்ட் முடக்கம் எனவும்,தேடப்படும் குற்றவாளி எனவும் பல செய்திகள் வெளிவரும்..அந்த வகையில்,வைர வியாபாரி நீரவ் மோடி விவகாரத்திலும்,கிங்பிஷர் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா விவகாரத்திலும் மிக தெளிவாக தெரியும்....

இந்திய வங்கியில் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தாமல் வேறு நாடுகளுக்கு தப்பித்து சென்று நிம்மதியாக வாழ்கின்றனர் நீரவ்,மல்லையா....etc

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தற்போது ஊழல் வழக்குகளில் சிக்கிய அரசு அதிகாரிகளுக்கு இனி பாஸ்போர்ட் கிடையாது என மத்திய அரசு புதிய விதிமுறையை அமல் படுத்தியுள்ளது.

அதன்படி,ஊழல் வழக்கில் சிக்கி உள்ள அதிகாரியின் வழக்கு நிலுவையில் இருந்தாலோ அல்லது குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தாலோ பாஸ்போர்ட் மறுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது

மேலும்,மருத்துவ சிகிச்சை போன்ற அவசர தேவைக்கு மட்டுமே அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.