ஆசியாவிலேயே மிகப் பெரிய அணையான இடுக்கி அணையா இடுக்கி அணை தற்போது மதன் முழுக் கொள்ளவை எட்டியுள்ளது. இதை அடுத்து அணையை திறப்பதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அநோகமாக இன்று அணை திற்றககப்படும் முன் ரெட் அலர்ட் விடப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. 26 ஆண்டுகளுக்குப் பின் அணை திறக்கப்பட உள்ளதால், மக்கள் அணையைப் பார்வையிட மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ளது இடுக்கி அணை. குறவன் மலை, குறத்தி மலை ஆகிய இரு அணைகளையும் இணைத்து ஒரு அரைவட்டம் போன்று, பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

வளைவு வடிவ அணைகளில் ஆசியாவிலேயே மிகப் பெரிய அணை, இந்த இடுக்கி அணை,  கடந்த 1969-ம் ஆண்டு அணைக் கட்டும் பணி தொடங்கப்பட்டு 1973-ம் ஆண்டு இடுக்கி அணை பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த அணையின் மொத்த உயரம் 550 அடி உயரமாகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், இடுக்கியில் உள்ள மூலமட்டம் பகுதியில் உள்ள நீர்மின்நிலையத்தில் மின்சாரம் எடுக்கப் பயன்படுகிறது. இந்த நீர்மின் நிலையத்தில் இருந்து 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

செருதோனி, குலமாவு ஆகிய இரு அணைகளையும் இணைத்து, இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த கொள்ளவு 72 டிஎம்சி ஆகும்.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக கேரள மாநிலத்தில் பெய்துவரும்  தென் மேற்கு பருவமழையால், அணை நிரம்பி வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 2 ஆயிரத்து 403 அடியில் இப்போது, 2,397 அடி தண்ணீர் இருப்பதால், அணை நிரம்பும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இன்று மாலைக்கும் அணை திறக்கப்பட வாய்புள்ளதால் தரைப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும்  அணை திறப்பதற்கான நடவடிக்கைகளையும் கேரள அரசு மேற்கொண்டுள்ளது. இதையடுத்து ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் கடந்த 1996-ம் ஆண்டு இடுக்கி அணை தண்ணீர் செருதோனி அணை வழியாகத் திறக்கப்பட்டது. அதன்பின் கடந்த 26 ஆண்டுகளாக இடுக்கி அணை நிரம்பும் அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்நிலையில், இப்போது அணை தனது முழுக்கொள்ளவை எட்ட இருப்பதால், அணை திறக்கப்பட உள்ளது.

இடுக்கி அணையில் இருந்து திறக்கப்படும் நீர், தடியம்பாடு, கரிம்பன், சீலிச்சுவடு, கீரித்தோடு வழியாக லோயர் பெரியாறு அணையை அடைகிறது. அங்குள்ள அணை நிரம்பியவுடன், நீரியமங்கலம் வழியாக, பூத்தாத்தன்கீடி, காலடி, பெரம்பாவூர், ஆலுவா, வேம்பநாடு முகத்துவாரத்தின் வழியாகச் சென்று அரபிக்கடலில் கலக்கிறது.