அசாமில் இருந்து 13 பேருடன் சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் திடீரென மாயமாகியுள்ளது. இந்த விமானம் விபத்தில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆகையால் விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

அசாம் மாநிலம் ஜோர்கத் விமானப்படை தளத்தில் இருந்து அருணாச்சல பிரதேச பகுதியை நோக்கி இந்திய விமானப்படையின் ஏஎன்-32 ரக விமானம் 12.25 மணியளவில் 13 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. ஒரு மணியளவில் மெஞ்சுகா பகுதியை நோக்கி சென்ற போது திடீரென தகவல் ராடார் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதனையடுத்து உடனடியாக விமானத்தை தேடும் பணியை தொடங்கியுள்ளனர். சுகோய்-30 மற்றும் சி130 சிறப்பு விமானம் ஆகியவற்றில் சென்று தேடும் பணி நடைபெறுகிறது. இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம். மேலும் விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.