ஜி20 உச்சி மாநாடு: போர் பயிற்சி நடத்தும் இந்திய விமானப்படை!

ஜி20 உச்சி மாநாடுக்கு இடையே, பெரிய போர் பயிற்சியில் இந்திய ராணுவம், விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர்

IAF kicked off a major combat training exercise ahead of g20 smp

ஜி20 உச்சி மாநாடு வருகிற 9,10ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், வடக்கு மற்றும் மேற்கு செக்டாரில் சீனா-பாகிஸ்தான் முனைகளில் வான்வழி போர் பயிற்சியில் இந்திய விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் மற்றும் கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

லடாக் முதல் ராஜஸ்தான் வரையிலான வான்பகுதிக்கு பொறுப்பு வகிக்கும் இந்திய விமானப்படையின் முன்வரிசையான மேற்கு கட்டளையானது ‘திரிசூல்’ எனும் பெயரிலான பயிற்சியை நடத்தி வருகின்றனர். சீனாவுடனான எல்லை பிரச்சினை 4ஆவது ஆண்டாக தொடரும் நிலையில், கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவத்தினர் இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வார இறுதியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், ராணுவத்தினரின் இந்த பயிற்சி கவனம் ஈர்த்துள்ளது.

இந்திய விமானப்படையின் ஒட்டுமொத்த போர் தயார்நிலையை சரிபார்க்கும்  பொருட்டு, இந்த பயிற்சியான 10 நாட்கள் நடைபெறவுள்ளது. "ரஃபேல், ஜாகுவார், மிக்-29 மற்றும் சுகோய்-30எம்கேஐ போன்ற போர் விமானங்கள், சி-130ஜே மற்றும் சி-17 போன்ற போக்குவரத்து விமானங்கள், S-400s, MR-SAMS மற்றும் ஆகாஷ் போன்ற வான்வழி வழிகாட்டும் ஆயுதங்கள் இந்த பயிற்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இதுகுறித்த விவரமறிந்த வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

உதயநிதியின் தலைக்கு விலையை அதிகரித்த பரமஹம்ச ஆச்சார்யா!

செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டின் போது, அதிதீவிரம் கொண்ட இந்த போர் பயிற்சிகள் இடைநிறுத்தம் செய்யப்படும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், போர் விமானங்கள், ரேடார்கள் உள்ளிட்டவைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி வான்பரப்பில் ஏற்கனவே இந்திய விமானப்படை நிலைநிறுத்தியுள்ளது.

அதேபோல், தலா 70,000 வீரர்கள் கொண்ட இந்திய ராணுவனத்தின் மலைப்படைகளான 1 மற்றும் 17 கார்ப்ஸ் ஆகியவையும் போர்களுக்கான கனரக ஆயுதங்களுடன் தாங்கள் நியமிக்கப்பட்டுள்ள செயல்பாட்டுப் பகுதிகளில் குழுக்களாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கோடைகாலத்திலும் 1 கார்ப்ஸ் மற்றும் 17 கார்ப்ஸின் பிரிவுகள் 3,488-கிமீ தூரத்திலான உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் பயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. மதுராவை தலைமையகமாக கொண்டுள்ள 1 கார்ப்ஸ் பிரிவினர், உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் வடக்கு பகுதியிலும், பாகிஸ்தான் உடனான மேற்கு முன் வரிசையான 17 கார்ப்ஸ் பிரிவினர் மேற்குப் போர்முனைக்கு பதிலாக உள்ள சும்பி பள்ளத்தாக்கு உட்பட கிழக்குப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிழக்கு லடாக்கில் சீனா உடனான மோதலின் தீவிரம் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை தென்படவில்லை. மூலோபாய ரீதியாக அமைந்துள்ள டெப்சாங் புல்ஜ் மற்றும் டெம்சோக்கிற்கு அருகிலுள்ள சார்டிங் நிங்லுங் நல்லா பாதை சந்திப்பில் துருப்புக்களை வெளியேற்ற சீனா ஒப்புக்கொள்ளவில்லை. 2020 மே மாதம் முதல் ராணுவ டாங்கிகள், பீரங்கித் துப்பாக்கிகள் மற்றும் SAGW போன்ற கனரக ஆயுதங்களுடன் தலா 50,000 வீரர்களை இரு தரப்பும் நிலைநிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios