பெங்களூரில் உள்ள கெம்பாம்புதி, குப்பலாலா மற்றும் மேஸ்திரிபால்யா ஏரிகளை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார். 

பெங்களூரில் உள்ள கெம்பாம்புதி, குப்பலாலா மற்றும் மேஸ்திரிபால்யா ஏரிகளை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் எம்.கிருஷ்ணப்பா, ரவி சுப்ரமணிய மற்றும் உதய் பி கருடாச்சார், ஏரி வல்லுநர்கள் மற்றும் குடிமக்களுடன் ஏரிகளை ஆய்வு செய்ததோடு, இந்த ஏரிகளை புனரமைத்து பாதுகாக்கும் வழிகள் குறித்து ஆலோசித்தார். ராஜீவ் சந்திரசேகர், நீர்நிலைகளைப் பாதுகாத்தல், புத்துயிர் பெறுதல் மற்றும் ஆக்கிரமிப்புகளைத் தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். யுனைடெட் பெங்களூருவுடன் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். யுனைடேட் பெங்களூர் என்பது ஏரிகள் ஆக்கிரமிப்பு தடுப்பது, குப்பைகளை அகற்றுவது பெங்களூரு ஏரிகளைப் பாதுகாப்பது ஆகியவையை நோக்கமாகக் கொண்ட ஒரு தளம் ஆகும்.

இதுஒருபுறம் இருக்க மறுபுறம் குடியிருப்போர் நலச் சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் குடிமக்கள் தன்னார்வலர்கள் ஏரிகளைப் பாதுகாப்பதில் சிறந்து விளங்குகின்றனர். இவர்கள் பெங்களூரு முழுவதும் உள்ள பல ஏரிகளை புத்துயிர் பெற வைத்துள்ளனர். மேலும் பெங்களூரில் ஆக்கிரமிப்பால் தத்தளித்து வரும் மேஸ்திரிபால்யா ஏரியை புனரமைப்பதிலும் அவர்கள் தீவிர பங்காற்றினார். இந்த நிலையில் ஆக்கிரமிப்பால் பாழடைந்த பெங்களூரு மேஸ்திரிபாளையம் ஏரியை புதுப்பிக்கும் பணியில் ராஜீவ் சந்திரசேகரும் ஈடுபட்டுள்ளார். நகரத்தில் உள்ள பல ஏரிகளைப் பாதுகாக்க பல ஏரிக் குழுக்கள், உள்ளூர் சமூகம் மற்றும் ஏரி மற்றும் சட்ட நிபுணர்களுடன் அவர் பல ஆண்டுகளாக அயராது உழைத்துள்ளார்.

பெல்லந்தூர், வர்தூர், ராம்புரா, யெலஹங்கா, ஹொரமாவு மற்றும் சரக்கி உள்ளிட்ட பல ஏரிகளை பாதுகாத்து ராஜீவ் சந்திரசேகர் தனி செல்வாக்கையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் இன்று பெங்களூரில் உள்ள கெம்பாம்புதி, குப்பலாலா மற்றும் மேஸ்திரிபால்யா ஏரிகளை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த குடிமக்கள் மற்றும் பிபிஎம்பி அதிகாரிகளை சந்தித்த அவர், இந்த ஏரிகளை மேம்படுத்த குடிமக்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் அவற்றை அம்ரித் சரோவர் திட்டத்தில் சேர்த்து, இந்த ஏரிகளை மீட்டு புத்துயிர் அளிப்பதன் செயல் திட்டம் பற்றியும் விசாரித்தார். அதுமட்டுமின்றி ஏரிகளை புனரமைப்பதில் பெங்களூருக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.