Asianet News TamilAsianet News Tamil

தேசிய குடிமக்கள் பதிவேட்டை நிறைவேற்ற விடமாட்டேன்... கூட்டணி கட்சியின் அறிவிப்பால் மோடி அதிர்ச்சி..!

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டத்தை பாஜக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. விரைவில் அமல்படுத்தப்பட உள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுத் திட்டத்திற்காக ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

I will not let the national citizens register...bihar cm Nitish Kumar
Author
Bihar, First Published Jan 15, 2020, 12:37 PM IST

நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவது தேவையற்ற ஒன்று என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டத்தை பாஜக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. விரைவில் அமல்படுத்தப்பட உள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுத் திட்டத்திற்காக ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கு நாட்டில் இருக்கும் பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அதேபோல் இந்த திட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பு வராது என்றும் பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். 

I will not let the national citizens register...bihar cm Nitish Kumar

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர்;- குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய விவகாரம் தொடர்பாக நாட்டில் பெரும் கொந்தளிப்பு நிலவி வருகின்றது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அரசின்போது கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியின்படி தேசிய குடிமக்கள் பதிவேடனானது அசாமுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

I will not let the national citizens register...bihar cm Nitish Kumar

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவது அவசியமற்றது மற்றும் நியாயமற்றது. மேலும் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க தயார் எனவும் நிதிஷ்குமார் தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் என்.ஆர்.சி-க்கு எதிராக இப்படி கூறியுள்ளது பாஜகவை அதிர்ச்சிடைய செய்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios