இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, கார் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்ததையடுத்து ஷமியை காண அவரது மனைவி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஷமி மீது அவரது மனைவி பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதில் தன்னுடைய கணவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும் ஆபாச சாட் செய்வதாகவும் ஆதாரத்துடன் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். மேலும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டை வைத்தார் அவருடைய மனைவி ஜகான்.

மேலும் ஷமி குடும்பத்தினர் தன்னை கொலை செய்ய முற்ப்பட்டதாகவும் குழந்தைக்காக தான்,  இதுநாள் வரை பொறுமை காத்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஷமி டெல்லியில் காரில் சென்றுக்கொண்டிருந்த போது, ஒரு ட்ரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய ஷமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது பின்னர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ஷமிக்கு தையல் போடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ஓய்வில் உள்ள தன்னுடைய கணவர் ஷமியை காண வேண்டும் என்று அவருடைய மனைவி ஜகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  "நான் ஷமியை காதலிக்கிறேன் அவர் என்னை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் அவரை உடனடியாக பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்"... எனக்கும் அவருக்கும் பிரச்சனை வேறு, ஆனால் அதற்காக காயம் அடைந்த தன்னுடைய கணவரை பார்க்காமல் இருக்க முடியாது என உருக்கமாக தெரிவித்துள்ளார் மனைவி ஜகான்.

இதற்கு முன்னதாக, மனைவியின் குற்றச்சாட்டுகளால் கடந்த சில நாட்களாகவே மன ரீதியாக ஷமி பாதிப்பிற்கு உள்ளானார் என அவருடைய நட்பு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.