I killed my brother because he told me to cook ...

சமையல் செய்வது யார் என்ற தகராறில், அண்ணனை தம்பியே வெட்டிக் கொன்ற சம்பவம் அரியனா மாநிலத்தில் நடந்துள்ளது. அண்ணனைக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, அரியனா மாநிலம் குருக்ராம் அருகே சரஸ்வதி என்க்ளேவ் பகுதியில் குடியிருந்தவர் ஜெய்சிங். இவரது தம்பி பல்வந்த் சிங். உத்தரபிரதேசத்தைச் சேர்ந் இவர்கள், ஒரே அறை எடுத்து தங்கி இருந்தனர். இவர்கள் இருவரும் வெல்டிங் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஜெய்சிங், ரத்த வெள்ளத்தில் வீட்டுக்குள் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினோ. அப்போது, அவரது தம்பி பல்வந்த் சிங்தான் அண்ணனைக் கொலை செய்தது தெரியவந்தது. 

பல்வத் சிங் தனது வாக்குமூலத்தில் தெரிவித்த தகவல் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரைக் கைது செய்துள்ளோம். பல்வந் சிங் தனது வாக்குமூலத்தில் நானும் எனது அண்ணன் ஜெய்சிங்-ம் வெல்டிங் வேலை செய்து வந்தோம். ஜெய்சிங், நேரத்திற்கு வீட்டுக்கு வருவதில்லை. எனக்கு மறுநாள் வேலைக்கு சீக்கிரம் போக வேண்டும் என்பதால் இது எனக்கு மிகவும் தொந்தரவாக இருந்தது. தாமதமாக வீட்டுக்கு வருவதோடு அச்சமயம் சமைக்கச் சொல்லி என்னை வற்புறுத்துவார். 

மூன்று நாட்களுக்கு முன்னர் இது தொடர்பாக நாங்கள் சண்டையிட்டுக் கொண்டோம். நீயே சமையல் செய்து கொள் என்று நான் கூறிவிட்டேன். சம்பவத்தன்று அவர் வழக்கம்போல் தாமதமாக வீட்டுக்கு வந்து என்னை சமைக்கும்படி வற்புறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரைக் கொன்றுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.