பாலிவுட் நடிகர் காமல் ஆர் கான் தனக்கு புற்றுநோய் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்

இவர் பொதுவாகவே சர்ச்சையில் அடிக்கடி சிக்குவார் என்பது தெரிந்த ஒன்றே...

இன்னும் சொல்லப்போனால் பாலிவுட் பிரபலங்களை அடிக்கடி வம்புக்கு இழுப்பார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டவர் இவர்.

இது தவிர்த்து, பாலிவுட்டின் நம்பர் ஒன் விமர்சகர் நான் தான் என அடிக்கடி சொல்பவர். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள  கருத்து அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது

அதில்,"எனக்கு வயிற்றில் புற்று நோய் உள்ளது என்றும், அதுவும் 3 ஆம்  ஸ்டேஜில் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நான் இன்னும் 2 ஆண்டு காலம் மட்டுமே உயிர் வாழ்வேன் என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து  உள்ளார்.

வாழ்க்கை வெறுத்த நிலை

என் மேல் யாரும் பரிதாபம் பட தேவை இல்லை. மேலும் எப்போதுமே என்னை வெறுக்கும் என்னை  விரும்பும் மக்களை  நான் பாராட்டுகிறேன் என தெரிவித்து  உள்ளார்

பச்சனுடன நடிக்க ஆசை

எனக்கு இரண்டு ஆசைகள் உள்ளது.அது நிறைவேறாமல் போய் விடுமோ என  கவலையாக இருக்கிறது என தெரிவித்து உள்ளார். ஏ கிரேடு படத்தை தயாரிக்க வேண்டும்,மேலும் அமிதாப் பச்சனுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும்,  அல்லது அவரை வைத்து ஒரு படமாவது எடுக்க வேண்டும் என்பது ஆசை என  தெரிவித்து உள்ளார்.

இனி என் நேரத்தை என் குடும்பத்தாருடன் செலவிட விரும்புகிறேன். நீங்கள் என்னை வெறுத்தாலும் சரி, விரும்பினாலும் சரி உங்கள் அனைவரையும்   விரும்புகிறேன் என அவர் தெரிவித்து உள்ளார்

கேஆர்கே வின் இந்த பதிவால் பாலிவுட் நட்சத்திரங்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.