நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதில் நான் சார்ந்திருக்கும் பாஜக கட்சிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று மேகாலயா மாநில பாஜக தலைவர் எர்னெஸ்ட் மாவ்ரி தெரிவித்தார்
நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதில் நான் சார்ந்திருக்கும் பாஜக கட்சிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று மேகாலயா மாநில பாஜக தலைவர் எர்னெஸ்ட் மாவ்ரி தெரிவித்தார்
மேகலாயா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது, மார்ச் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். இதையொட்டி பாஜக தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
பறிபோன சிவசேனா கட்சி| உத்தவ் தாக்கரே நிர்வாகிகளுடன் இன்று அவசர ஆலோசனை
பல மாநிலங்களில் மாட்டிறைச்சி விவகாரத்தை எழுப்பி அரசியல் செய்துவரும் பாஜக மேகாலயாவில் மாட்டிறைச்சி விவகாரத்தை எழுப்பவில்லை. அங்குவாழும் மக்களுக்கு மாட்டிறைச்சி முக்கியமான உணவு என்பதால், அங்கு இந்த விவகாரம் தேர்தல் நேரத்தில் எழுப்பப்படவில்லை.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் எர்நெஸ்ட் மாவ்ரியிடம் ஆங்கிலநாளேடு கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு அவர் அளித்த பதிலில், “ நான் மாட்டிறைச்சி சாப்விடுவேன். இதில் எனக்கும், நான் சார்ந்திருக்கும் பாஜகவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. பாஜக எந்தக் காரணத்தைக் கொண்டும், சாதி, மதம், பழக்கவழக்கங்கள் குறித்து சிந்திக்காது
நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதால், எனது கட்சிக்கு எந்தவிதத்திலும் பிரச்சினையில்லை. மாட்டிறைச்சி சாப்பிடுவது எங்களின் உணவுப் பழக்கம். இதில் அரசியல் கட்சிக்கு என்ன சிக்கல் வந்துவிடப்போகிறது. மேகாலயாவில் மக்கள் அனைவரும் மாட்டிறைச்சி சாப்பிடுவார்கள், இங்கு கட்டுப்பாடு ஏதும் இல்லை. மாட்டிறைச்சி சாப்பிடுவது எங்கள் கலாச்சாரம், பழக்கம். எங்களுக்கு யாரும் இந்த பழக்கத்தை மாற்றக் கட்டளையிட முடியாது.
இதுதான் பிளான்! அவர்களால் 100 இடங்களில்கூட ஜெயிக்க முடியாது! நிதிஷ் குமார் உறுதி
இந்த தேர்தலில் பாஜக 60 இடங்களிலும் போட்டியிடுகிறோம், குறைந்தபட்சம் 34 இடங்களில் வெல்வோம் என நம்புகிறோம். ஆனால், அது மக்களின் கைகளில் இருக்கிறது. மக்களுக்கு எந்தக் கட்சிக்கு வாக்களிக்க விரும்புகிறார்களோ அவர்களுக்குத்தான் வாய்ப்பு வழங்குவார்கள். பாஜகவுக்கு மக்கள் வாய்ப்பு வழங்குவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறன். இந்த முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது. என்பிபி மற்றும் யுடிபி கட்சியும் போட்டியிடுகின்றன.
இவ்வாறு மாவ்ரி தெரிவித்தார்
