Asianet News TamilAsianet News Tamil

Varun Gandhi and Rahul Gandhi:வருணைச் சந்திப்பேன், கட்டிஅணைப்பேன் ஆனால்..! ராகுல் காந்தி வெளிப்படை

பாஜக எம்.பி.யும், மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தியை சந்திப்பேன், கட்டி அணைப்பேன் ஆனால், இருவரின் சித்தாந்தங்களும் வேறு என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.

I can give him a hug, but: Varun Gandhi, Rahul Gandhi's cousin
Author
First Published Jan 17, 2023, 3:32 PM IST

பாஜக எம்.பி.யும், மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தியை சந்திப்பேன், கட்டி அணைப்பேன் ஆனால், இருவரின் சித்தாந்தங்களும் வேறு என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை சென்று வருகிறார். இதுவரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உ.பி. சென்று பஞ்சாப்பில் ராகுல் காந்தி பயணித்து வருகிறார்.

ராகுல் காந்தி பாரத் ஜோடோ பயணத்தில் அத்துமீறல்! பாதுகாப்பு வளையத்தை மீறி இளைஞர் பாய்ந்தார்

I can give him a hug, but: Varun Gandhi, Rahul Gandhi's cousin

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம், ஹோசியார்பூரில் நிருபர்களுக்கு ராகுல் காந்தி இன்று பேட்டியளித்தார். அப்போது அவரிடம் அவரின் பெரியப்பா மகனும், முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனும், பாஜக எம்.பியுமான வருண் காந்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ராகுல் காந்தி பதில் அளித்ததாவது:

 

வருண் காந்தி பாஜகவில் உள்ளார். அவர் என்னுடைய பாரத் ஜோடோ யாத்திரைக்கு வந்தாலோ அல்லது கலந்து கொண்டாலோ அவருக்கு பிரச்சினையாகிவிடும். அவரின் சித்தாந்தத்தோடு என்னுடைய சித்தாந்தம் ஒத்துவராது. நான் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்குச் செல்லமாட்டேன். அதற்கு முன்பாக நான் என் தலையை வெட்டிக்கொள்வேன். 

தேசத்திடம் பிரதமர் மோடியும், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனும் எதை மறைக்கிறார்கள்? காங்கிரஸ் கேள்வி

I can give him a hug, but: Varun Gandhi, Rahul Gandhi's cousin

என்னுடைய குடும்பத்துக்கென தனி சித்தாந்தம் இருக்கிறது. இன்றோ அல்லது ஒரு நேரத்தில் வருண் வேறு ஏதாவது ஒரு சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால், நான் அந்த சித்தாந்தத்தை ஏற்கமாட்டேன். நான் வருணைச் சந்திப்பேன், கட்டி அணைப்பேன், ஆனால், அந்த சித்தாந்தத்தை மட்டும் ஏற்கமாட்டேன். 

இன்று அனைத்து அரசியலமைப்புச் சார்ந்த அமைப்புகளையும், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கட்டுப்படுத்துகின்றன, அழுத்தம் கொடுக்கின்றன, கட்டுப்படுத்துகின்றன. அனைத்து அமைப்புகள் மீதும் அழுத்தம் கொடுக்கின்றன. ஊடகங்கள் மீது அழுத்தம் விழுகிறது, அதிகாரிகள் மீது அழுத்தம் விழுகிறது.தேர்தல் ஆணையம் மீதும், நீதித்துறை மீதும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

பிஸ்னஸ், மொபைல் போன் வேண்டாம்! மும்பையில் எளிமையாக வாழும் ரத்தன் டாடாவின் சகோதரர்

ஒரு அரசியல் கட்சிக்கும் மற்றொரு அரசியல் கட்சிக்கும் இடையிலான போர், சண்டை அல்ல. நாட்டின் அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகளை கையகப்படுத்தியுள்ள அமைப்புக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான போட்டி. 

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios