Asianet News TamilAsianet News Tamil

நான் ஆணுமல்ல... பெண்ணுமல்ல... 11 பாலினங்கள் அடங்கிய மிக்ஸிங் பிறவி... அதிர வைக்கும் நித்தியானந்தா..!

நான் ஆணும் அல்ல... பெண்ணுமல்ல  உறுதிப்படுத்த முடியாத 11 பாலின அடையாளங்கள் அடங்கிய பாலின பிறவி என்றும் தன்னைப்பற்றி நித்தியானந்தா தெரிவித்துள்ளார். 

I am not a man ... not a woman ... 11 Gender Identity Mixed Birth ... Stunning Nithyananda ..!
Author
Himalayas, First Published Dec 5, 2019, 3:08 PM IST

46 பக்க தன்னிலை விளக்க மனுவை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திடம் நித்தியானந்தா அளித்தார். அந்தபுகார் மனுவில் இந்திய அரசு மீது ஏராளமான புகார்களை அடுக்கியிருக்கிறார் நித்தியானந்தா. இந்தியாவில் இந்துக்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர்; தம்மை ஆண்மை பரிசோதனைக்குட்படுத்தினர் என புகார் கூறியுள்ளார்.I am not a man ... not a woman ... 11 Gender Identity Mixed Birth ... Stunning Nithyananda ..!

இந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் என்னை 100 முறை கொலை செய்ய முயற்சித்தன. பாஜக, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்பினர் என்னை கொலை செய்யத் தூண்டினர். தான் உலகம் முழுவதும் ஓரின சேர்க்கைக்காக உரிமை குரல் கொடுத்து வருவதாக நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளார். இதனாலேயே பாஜக, ஆர்.எஸ்.எஸ் பஜ்ரங் தள் போன்ற அமைப்பும் தம்மையும் தமது ஆன்மிக அமைப்பான இந்து ஆதி சைவ சிறுபான்மை அமைப்பை அவர்கள் எதிர்த்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். தாம் ஆணும் அல்ல. பெண்ணும் அல்ல என்பதை பகிரங்கமாக குறிப்பிட்டு விட்டதையும் நித்யானந்தா மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். I am not a man ... not a woman ... 11 Gender Identity Mixed Birth ... Stunning Nithyananda ..!

உறுதிப்படுத்த முடியாத 11 பாலின அடையாளங்கள் அடங்கிய பாலின பிறவி என்றும் தம்மை பற்றி  அவர் தெரிவித்துள்ளார்.  ஆனால், தம்மை துறவி என்றும் பாராமல் ஆண்மை பரிசோதனைக்கு உட்படுத்தி கொடுமை படுத்தியதாக நித்தியானந்தா குற்றம்சாட்டியுள்ளார். எனவே தனது தீவை தனிநாட்டை ஐநா சபை அங்கீகரிக்க வேண்டும். என் மீதான வழக்குகளை ஒப்புக் கொள்ளாவிட்டால் என்கவுண்ட்டரில் என்னை சுட்டுக் கொல்வோம் என போலீசார் மிரட்டினர். I am not a man ... not a woman ... 11 Gender Identity Mixed Birth ... Stunning Nithyananda ..!

போகிற போக்கில் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுப்பது போல இந்திய அரசு மீது அவதூறு பரப்பி ஐநாவிடம் நித்தியானந்தா புகார் கொடுத்து தனிநாடு கேட்டிருக்கிறார். நித்தியானந்தாவின் சேட்டைகள் அனைத்தும் அவர் மீதான தேசதுரோக குற்றங்களில் அடுக்கடுக்காக இணைகின்றன என்பது சட்டவல்லுநர்களின் கருத்து.

Follow Us:
Download App:
  • android
  • ios