உக்ரைன் - ரஷ்யா போரில் ஹைதராபாத் இளைஞர் பலி! வேலை தேடி போனவருக்கு நேர்ந்த விபரீதம்!
30 வயதான முகமது அஃப்சான், கடந்த ஆண்டு டிசம்பரில் வேலை வாங்கித் தருவதாக அளித்த வாக்குறுதியின் பேரில் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மாஸ்கோவிற்குச் சென்ற அவர் ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு உக்ரைன் எல்லைக்கு அனுப்பப்பட்டார் எனச் சொல்லப்படுகிறது.
உக்ரைனுடனான போரில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒருவர் பலியாகியுள்ளார். அவர் வேலைவாய்ப்பு மோசடியில் சிக்கி ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
30 வயதான முகமது அஃப்சான், கடந்த ஆண்டு டிசம்பரில் வேலை வாங்கித் தருவதாக அளித்த வாக்குறுதியின் பேரில் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மாஸ்கோவிற்குச் சென்ற அவர் ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு உக்ரைன் எல்லைக்கு அனுப்பப்பட்டார் எனச் சொல்லப்படுகிறது.
ரஷ்ய ராணுவத்தில் சேர வற்புறுத்தப்பட்ட இந்திய இளைஞர்களை மீட்குமாறு ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசி வேண்டுகோள் விடுத்த இந்நிலையில் மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தியர் ஒருவர் போர் முனையில் இறந்த செய்தியை உறுதி செய்துள்ளது.
அஃப்சானின் குடும்பத்தினர் ரஷ்யாவில் அவருக்கு வேலையை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்ற முகவரை தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால் அவரது மரணம் குறித்து எந்த உறுதிப்படுத்தலும் கிடைக்கவில்லை. இதனால், ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசி மூலம் மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டுள்ளார்.
பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம்: என்.ஐ.ஏ. அறிவிப்பு
முகமது அஃப்சன், உக்ரைனுடனான ரஷ்ய எல்லையில் பணியாற்றியபோது துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவரது சகோதரர் இம்ரானை தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை.
23 வயதான அஃப்சானின் சகோதரர் சையத் சல்மான், தனது சகோதரர் வேலை மோசடியில் சிக்கி ரஷ்ய இராணுவத்தில் சேர்ந்தார் எனவும் அவர் மாஸ்கோவிலிருந்து வெகு தொலைவில் உள்ள உக்ரைன் எல்லையில் போருக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எனவும் கூறியுள்ளார். இதனால் அவரைத் தொடர்புகொள்ள கடினமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வேலை மோசடிகள் மூலம் ரஷ்ய ராணுவத்தில் சேர இந்திய இளைஞர்கள் அழைத்துச் செல்லப்படுவது குறித்து எம்பி ஓவைசி கவலை எழுப்பியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அரசாங்கம் தலையிட்டு அவர்களை மீட்குமாறு வலியுறுத்தினார்.
இம்ரான் சமீபத்தில் தனது சகோதரனைத் தேடி மாஸ்கோவிற்குச் சென்று அவரை வீட்டிற்கு அழைத்து வர விரும்புவதாகக் கூறியிருந்தார். அஃப்சானுக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.வணிகவியல் பட்டதாரியான அவர், ரஷ்யா செல்வதற்கு முன்பு, ஒரு துணிக்கடையில் பணிபுரிந்தார்.
மழை பெய்தால் இப்படி ஒரு டிஸ்கவுண்ட் கிடைக்குமா! விருந்தனரைக் கவரும் சிங்கப்பூர் ஹோட்டல்!