பாஜக வேட்பாளர் மாதவி லதாவை தள்ளி விடும் பெண்: வைரல் வீடியோ!
மசூதியை நோக்கி அம்பு விடும் சைகையை செய்து சர்ச்யைில் சிக்கிய பாஜக வேட்பாளர் மாதவி லதாவை விடியோ வைரலாகி வருகிறது
தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில், ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா கலந்து கொண்டார். அவர்களது ஊர்வலம் மசூதி இருந்த பகுதிக்குள் நுழைந்த போது, மசூதியை நோக்கி வில்லில் இருந்து அம்பு எய்வது போல் பாஜக வேட்பாளர் மாதவி லதா நடித்தார். இதனை கண்டு அங்கிருந்த கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.
ராமநவமி கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி பல தரப்பினரும் வலியுறுத்து வருகின்றனர்.
மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்!
இந்த நிலையில், மசூதியை நோக்கி அம்பு விடும் சைகையை செய்து சர்ச்யைில் சிக்கிய ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதாவை விடியோ வைரலாகி வருகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது மாதவி லதாவை ஒரு பெண் தள்ளிவிடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆனால், அந்த வீடியோவில் அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட மாதவி லதா மீதான அதிருப்தி காரணமாக அப்பெண் அவரை தள்ளி விட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த நபரை கோபமாக மாதவி லதா கடிந்து கொள்ளும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக, ஹைதராபாத் மக்கள் பாஜகவின் நோக்கத்தைப் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் பாஜக-ஆர்எஸ்எஸ்-ன் கொச்சையான செயல்களை ஏற்க மாட்டார்கள். இதுதான் பாஜக பேசும் வளர்ச்சியடைந்த பாரதமா? என கேள்வி எழுப்பிய அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஒவைசி, மாதவி லதாவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.