கடந்த  சில தினங்களுக்கு முன்பு தெலங்கானா மானிலிளம் ஹைதராபாதிலுள்ள  மருத்துவமனை ஒன்றில் அருகே முகம்மது இர்பான் என்ற நபர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த பெண் ஒருவர், தனது இரண்டு மாதப் பெண் குழந்தையைச் சிறிது நேரம் பார்த்துக்கொள்ளுமாறு அவரிடம் கொடுத்தார். ஆனால், வெகு நேரமாகியும் அந்த பெண் வராததால் பதற்றமடைந்தார் இர்பான். அந்த குழந்தையைத் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றார். அந்த குழந்தையின் அழுகையை நிறுத்த முயன்றனர் அவரது குடும்பத்தினர். இரண்டு மாதக் குழந்தை அதனைக் குடிக்கவில்லை. இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் அப்துல்கஞ்ச் காவல் நிலையத்தில் அக்குழந்தையை ஒப்படைத்தார் இர்பான்.

அங்கு இரவுப் பணியில் இருந்த தலைமைக் காவலர் ரவீந்திரனுக்கு, அழும் குழந்தையை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை. இவர், பேகம்பேட் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் தன் மனைவி பிரியங்காவைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அக்குழந்தையின் நிலைமை மிக மோசமாக இருப்பதாகக் கூறினார். மகப்பேறு விடுமுறையில் வீட்டில் இருந்த பிரியங்கா, உடனடியாக

அங்கு வந்த பிரியங்கா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து பசியாற்றினார். இந்த செய்தி ஊடகங்கள் மூலம் பரவியதை அடுத்து, பிரியாங்காவுக்கும், ரவீந்திரனுக்கும் பாராட்டு குவிந்து வருகிறது. இதனிடையே குப்பை பொறுக்கும் பெண்ணான அந்த குழந்தையின் தாயை எச்சரித்து போலீசார் குழந்தையை ஒப்படைத்தனர்.