தனியார் ஹோட்டல் ஒன்றில் போதையில் ஆபாச நடனம் ஆடிய 21 இளம்பெண்களை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தெலங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஜுப்ளி ஹில்ஸ் சாலை முக்கிய சாலையாக திகழ்கிறது. இங்குள்ள தனியார் ஹோட்டலில் நடந்த பப் நிகழ்ச்சியில்தான் அந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மது மட்டுமல்லாது, பல்வேறு போதைப் பொருள்களும் இந்த பப்பில் சரளமாகப் புழங்கியுள்ளன. குறிப்பாக வார இறுதி நாட்களில் ஏராளமான பெண்கள் இந்த தனியார் ஹோட்டலுக்கு வந்து பப்பில் கலந்துகொள்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. மேலும், போதைக்கு அடிமையான அந்த இளம்பெண்கள் ஆபாச நடனம் ஈடுட்டனர். இரவு முழுவதும் போதையில் இளம்பெண்கள் சுய நினைவின்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;- சபரிமலையில் யானை தாக்கி தமிழக பக்தர் உயிரிழப்பு... உடலை 8 கிலோ மீட்டர் சுமந்து வந்த பரிதாபம்..!

இதுதொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆபாச நடனத்தின் போது எல்லைமீறிக்கொண்டிருந்த 21 இளம்பெண்களை மதுபோதையில் தள்ளாடியே படியே போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு வந்த தொலைக்காட்சி சேனல்களின் வீடியோகிராபர்கள், இளம்பெண்களை வீடியோ எடுத்தனர். இதனால் ஆவேசமடைந்த இளம்பெண்கள் தங்களை வீடியோ எடுக்கக்கூடாது என்று கூச்சல் போட்டு கேமராக்களை தேசப்படுத்தினர். 

இதையும் படிங்க;-  டயர் வெடித்து பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய கார்... 4 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு... மற்றொரு குழந்தை ரத்த வெள்ளத்தில் அலறல்..!

இவர்களிடம் போலீசார் நடத்தி விசாரணையில் கேளிக்கை விருந்து ஒன்றிற்காக தங்களை பிரசாத் என்பவர் அழைத்து வந்து நடனமாட வைத்ததாக தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள பிரசாத் மற்றும் ஹோட்டல் உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த ஹோட்டலுக்குள் போதைப் பொருட்கள் எப்படி வந்தன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.