Asianet News TamilAsianet News Tamil

2 வது பொண்டாட்டியுடன் நெருக்கம்... அடம்பிடித்த முதல்மனைவி... கணவனின் சந்தோஷத்துக்கு கதவடைத்த கொரோனா..!

ஊரடங்கு உத்தரவால் இரண்டு மனைவிகளை உடைய ஒருவர் எந்த மனைவியின் வீட்டில் தங்குவது என்ற வித்தியாசமான பிரச்சனை எழுந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
 

husband of two wive confused on where he wants to go during curfew
Author
Bangalore, First Published Apr 11, 2020, 10:59 AM IST

ஊரடங்கு உத்தரவால் இரண்டு மனைவிகளை உடைய ஒருவர் எந்த மனைவியின் வீட்டில் தங்குவது என்ற வித்தியாசமான பிரச்சனை எழுந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 35 வயது நிரம்பிய ஒரு நபர் சொந்தமாக ஆயத்த ஆடை தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசித்த பெண்ணுக்கும்  கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அடுத்து முதல் மனைவிக்கு தெரியாமல் அந்த நபர் கடந்த ஆண்டு வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். வேலை சம்பந்தமாக வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு அந்த நபர் முதல் மனைவிக்கு தெரியாமல் அவ்வப்போது தனது 2-வது மனைவி வீட்டில் தங்கி வந்துள்ளார்.husband of two wive confused on where he wants to go during curfew

தனது கணவர் வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்த தகவல் முதல் மனைவிக்கு எப்படியோ தொியவந்தது. இதையடுத்து அந்த பெண் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மகளிர் உதவி மையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் இரண்டு மனைவிகளை திருமணம் செய்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வந்தனர். இதனையறிந்த அவர் தனது முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவியின் பெற்றோருடன் பேசினார். அதாவது, நான் தொழிற்சாலை நடத்திவருகிறேன். 

போலீசார் என்னை கைது செய்தால் எனது தொழில் பாதிக்கும், மேலும் நமது குடும்பத்திற்கு தான் அவமானம் என்று அவர் கூறியுள்ளார். இதனால், நான் முதல் மனைவி வீட்டில் ஒருவாரம், இரண்டாவது மனைவி வீட்டில் ஒரு வாரம் தங்குகிறேன் என்று கூறியுள்ளார். இதை அவரின் 2 மனைவிகளும், அவர்களது குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டனர். husband of two wive confused on where he wants to go during curfew

அதன்படி முதல் மனைவி வீட்டில் ஒரு வாரம், 2-வது மனைவி வீட்டில் அடுத்த வாரம் என்று தங்கியிருந்து வந்தார்.இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுவதால் கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் ஒரு வாரத்திற்கும் மேலாக அந்த வாலிபர் 2-வது மனைவி வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

ஒரு வாரம் முடிவந்த பின்னர் அவரது முதல் மனைவி தனது வீட்டுக்கு வரும்படி கூறியுள்ளார். அதற்கு அந்த வாலிபர், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வெளியே வர முடியவில்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது முதல் மனைவி இது பற்றி மீண்டும் மகளிர் உதவி மையத்தில் புகார் அளித்தார். 

பெண்ணின் புகாரையடுத்து மகளிர் உதவி மைய அதிகாரிகள் அந்த நபரை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர் ஊரடங்கு உத்தரவால் முதல் மனைவி வீட்டிற்கு செல்ல முடியவில்லை என்று கூறினார். இதையடுத்து முதல் மனைவியிடம் மகளிர் உதவி மையத்தின் அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு உங்கள் குடும்ப பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக தெரிவித்துவிட்டனர். husband of two wive confused on where he wants to go during curfew

அதே வேளையில் 2-வது மனைவியும் வெளியே செல்லக் கூடாது என்றும், எனது வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அந்த நபரிடம் வலியுறுத்தியுள்ளார். இரு மனைவிகளும் பிடிவாதம் பிடித்து வந்த நிலையில், விரக்தி அடைந்த அந்த நபர் நிலைமையை சமாளிக்க தனது நண்பர் ஒருவரின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார். இரண்டு பொண்டாட்டிக்காரர் வீட்டில் கொரோனா கும்மியடித்து கதற வைத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios