husband found after 7 days that his wife was conceived

திருமணமான 7 நாட்களில் தனது மனைவி 8 மாத கர்ப்பமாக இருக்கிறார் என தெரிந்து கொண்ட கணவர் ஷாக் ஆனார்.இந்த இன்ட்ரஸ்ட்டிங் சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் நாகமங்கலா என்ற நகரத்தின் அருகே உள்ளது பீமனஹள்ளி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த கமலா என்பவருக்கும், தோடா கருடஹள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த 8-ம் தேதி திருமணம் நடந்தது. 

திருமணத்துக்குப் பிறகு கமலா நடந்து கொண்ட விதம் சீனிவாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கமலா தனக்கு அடிக்கடி வயிறு வலிப்பதாக சொல்லிக் கொண்டே இருந்தார்.

இதையடுத்து சீனிவாசன், கமலாவை அருகில் உள்ள டாக்டரிடம் அழைத்துச் சென்றார்.அவரை பரிசோதித்த டாக்டர்கள், கமலா கர்ப்பமாக இருக்கிறார் என்றும் இது 8-வது மாதம் என்று கூறினர். 

இதைக் கேட்டு ஷாக்கான சீனிவாசனும் அவரது குடும்பத்தினரும் கமலாவும் அவரது குடும்பத்தினரும் தங்களை ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் அளித்தனர்.

இகு குறித்து கமலாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் அதே ஊரைச் சேர்ந்த சேகர் என்பவரை காதலித்து வந்ததாகவும், அவர் தன்னை திருமண்ம் செய்து கொள்ளவதாக கூறியதால் நெருங்கிப் பழகியதாகவும் கமலா கூறினார்.

ஒரு கட்டத்தில் கமலாவுடன் பழகுவதை சேகர் நிறுத்திக்கொண்டார். தான் கர்ப்பமாக இருப்பதாகவும் திருமணம் செய்துகொள்ளும்படியும் சேகரை கமலா வற்புறுத்தி வந்துள்ளார்.

 இந்த நேரத்தில்தான் வீட்டில் கமலாவுக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அதற்கு கமலாவும் சம்மதம் தெரிவிக்க சீனிவாசனுடன் திருமணம் நடந்திருக்கிது. இதையடுத்து சேகரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.