மனைவி தாமதமாக எழுந்திருப்பதும், சுவையின்றி சமைக்காததால் விவாகரத்து கேட்ட கணவரின் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

மும்பை சாந்தாகுருஸ் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவில் தன் மனைவி தாமதமாக எழுந்து சமைப்பதுடன், ருசியாக சமைப்பது இல்லை, தனக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கூட தர மறுப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த மனு அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த மனு, நீதிபதிகள் தாதெட், சாரங் கோட்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், மனைவி தாமதமாக எழுந்திருப்பதும், சுவையின்றி சமைப்பதும் கணவரின் சிறிய தேவைகளை பூர்த்தி செய்யாததும் கொடுமையான விஷயங்களாக தெரியவில்லை. அவர் மனைவி, அலுவலக வேலையுடன் சமையல் வேலையும் செய்து வருவதால் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.