டெல்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள சுதந்திர தின அணிவகுப்பை காண எப்படி டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்
நாடு தனது 76ஆவது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாட தயாராகி வருகிறது. குடியரசுத் தினத்துக்கு ராஜபாதை போன்று, சுதந்திர தினத்தின் முக்கிய அங்கமாக டெல்லி செங்கோட்டை விளங்குகிறது. சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியேற்றி உரையாற்றும் பிரதமர் மோடி, அணிவகுப்பு மரியாதையையும் ஏற்கவுள்ளார்.
இதனையொட்டி, டெல்லி செங்கோட்டையில் இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்திய நாட்டின் பெருமையை பறைசாற்றும் முப்படைகளின் இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியை பலரும் ஆர்வமுடன் கண்டு ரசிப்பர். அதற்கு முன்னரே அதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்.
இந்தியாவின் முதல் 5 பணக்கார மாநிலங்கள்: தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?
அதன்படி, இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை எப்படி முன்பதிவு செய்ய வேண்டும் எனப்து குறித்து பார்க்கலாம்.
** முதலில் https://aamantran.mod.gov.in/login என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்ல வேண்டும்
** அதில், '2023 சுதந்திர தினத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு' இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்
** அதில் கேட்கப்படும் பெயர், தொடர்பு விவரங்கள் மற்றும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை போன்ற தேவையான தகவலை உள்ளிடவும்
** பின்னர், சரிபார்ப்புக்கு தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
** அதன்பிறகு, டிக்கெட்டுகளின் எண்ணிக்கை மற்றும் வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
** தேர்ந்தெடுக்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கு ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும்
** இதையடுத்து, உங்களுக்கான டிக்கெட்டை டவுன்லோடு செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ளவும். டிக்கெட்டுகளுக்கான செய்தியை உங்கள் தொலைபேசிக்கு குறுஞ்செய்தியாகவும் வந்து விடும்
** சுதந்திர தின அணிவகுப்பை காண செல்லும்போது, நுழைவு வாயிலில் உங்களது டிக்கெட்டை காட்டி செல்ல வேண்டும்
சுதந்திர தினத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அணிவகுப்பை காண்டு ரசிக்கும் டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்கலாம். மூன்று வகையான டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. டிக்கெட்டுகளின் விலை ரூ.20, ரூ.100, ரூ.500 என விற்பனை செய்யப்படுகிறது.
