நாட்டில் எத்தனை சீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது தெரியுமா?

இந்தியாவில் சுமார் 20 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை சீனாவிலிருந்து வந்தவை. இது சைபர் தாக்குதல்களுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது மற்றும் பாதுகாப்பு அமைப்பில் சவால்களை உருவாக்குகிறது.

How many CCTV cameras are installed across the country? How many of these are chinese Rya

தற்போதைய காலக்கட்டத்தில் பாதுகாப்பு கருதி, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. ஆனால் நாடு முழுவதும் எத்தனை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, அவற்றில் எத்தனை சீனாவின் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? 

நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் கூறியது. குற்றச் செயல்களை நிறுத்துவதே இவற்றின் நோக்கமாகும். நாட்டின் தலைநகர் டெல்லியிலேயே சுமார் 1.5 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இதில் 1000 கேமராக்களில் 20 கேமராக்கள் சீனாவை சேர்ந்தவையாகும்.

இந்தியாவில் நிறுவப்பட்டதாகக் கூறப்படும் 20 லட்சம் சிசிடிவி கேமராக்களில் சுமார் 80 சதவீதம் சீன கேமராக்கள் என்று இந்தியாவில் உள்ள இன்ஃபோர்மா மார்க்கெட்ஸின் எம்டி யோகேஷ் முத்ராஸ் தெரிவித்தார். இதனைக் கருத்தில் கொண்டு நாட்டில் சிசிடிவி கேமராக்களை தயாரிக்கவும், சீன கேமராக்களை தடை செய்யவும் திட்டம் வகுக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சீனாவில் இருந்து சிசிடிவி கருவிகளுக்கான பல டெண்டர்களை இந்திய அரசு நிராகரித்துள்ளது. 

AI இணைய தாக்குதலின் அபாயத்தை அதிகரித்தது

தொழில்நுட்ப உலகில் தொடர்ச்சியான மாற்றங்கள் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளன. இந்த மாற்றங்களில் ஒன்று AI அதாவது செயற்கை நுண்ணறிவு, ஆனால் இது சைபர் தாக்குதலின் அபாயத்தையும் அதிகரித்துள்ளது. டெல்லி போக்குவரத்து காவல்துறையின் டிசிபி (தலைமை பகுதி-2) எஸ்.கே.சிங் இதிகுறித்து பேசிய போது “ கடந்த சில வருடங்களாக பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார். முக அங்கீகாரம், AI அடிப்படையிலான கண்டறிதல், முன்கணிப்பு பகுப்பாய்வு ஆகியவை பாதுகாப்பு அமைப்பை முற்றிலும் மாற்றியுள்ளன. இருப்பினும், பல சவால்களும் தோன்றியுள்ளன. உண்மையில், AI காரணமாக கடவுச்சொல் கசிவு போன்ற சைபர் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. தற்போது, ​​35 சதவீத முக்கியமான சொத்துக்கள் இணைய தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளன.

இந்தியாவில் சிசிடிவி சந்தை எவ்வளவு?

யோகேஷ் முத்ரேஷ் கூறுகையில், நாட்டின் மெட்ரோ நகரங்களில் பாதுகாப்புக்காக தொடர்ந்து புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களில் சிசிடிவி தேவை வேகமாக அதிகரித்துள்ளது. புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இந்தியாவின் சிசிடிவி சந்தை 2024 இல் $ 3.98 பில்லியன் ஆகும். இது 20.6 சதவிகிதம் வளர்ச்சியடைந்தால், இந்த சந்தை 2029 க்குள் $ 10.17 பில்லியனை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios