Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவை தங்கக் கடத்தலுக்கு பயன்படுத்திய கடத்தல் கும்பல்கள்

கொரோனா பெருந்தொற்றினால் வேலை இழந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் கடத்தல்காரர்கள் தங்கம், போதைப் பொருட்கள் முதலிய பொருட்களை இந்தியாவுக்குக் கடத்துவது தெரியவந்துள்ளது.

How Covid Spiked Gold Smuggling
Author
First Published Jan 4, 2023, 5:08 PM IST

‘இந்தியாவில் கள்ளக்கடத்தல்’ என்ற தலைப்பில் அண்மையில் மத்திய வருவாய்த்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கடத்தல் தொடர்பான பல்வேறு விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து இந்தியா - மியான்மர் எல்லை வழியாக வரும் மோட்டார் பாகங்களுக்குள் தங்கம் கடத்திவரப்பட்டுள்ளது. அதேபோல ஆப்கானிஸ்தானிலிருந்து மாதுளைக்குள் ஹெராயின் போன்ற போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளன.

இருக்கைகள், டயர்கள் முதலிய பல்வேறு வாகன உதிரி பாகங்களை அனுப்புகிற பெயரிலும் உள்ளே போதைப் பொருட்களை வைத்து அனுப்புவதாக மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விமானத்தில் மூதாட்டி முன் ஜிப்பை கழற்றி அசிங்கம் செய்த போதை ஆசாமி

டெல்லியில் லாரியின் பெட்ரோல் டேங்கில் 66 கிலோ தங்கம் தங்கம் கடத்தவந்தது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மியான்மர் வழியாக இந்தியாவுக்குள் வரும் கள்ளக்கடத்தல் தங்கம் பஞ்சாபுக்கு அனுப்பப்படுகிறது என்றும் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் அதிக அளவில் கடல் வழியாக நடக்கிறது. கடந்த செப்டம்பர் 2021ல் முந்த்ரா துறைமுகத்தில் முகத்தில் பூசும் பவுடருடன் 2,988 கிலோ போதைப் பொருள் பதுக்கி எடுத்துவரப்பட்டது.

கொரோனாவில் வேலை இழந்து அயல்நாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை நாட்டுக்கு அனுப்பிவைக்கிற சாக்கில் அவர்கள் மூலம் ஏராளமான தங்கத்தைக் கடத்தியிருப்பதும் தெரியவந்திருக்கிறது.

சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி

2021, 2022 நிதியாண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளக் கடத்தல் தங்கத்தில் 37 சதவீதம் வளைகுடா நாடுகளிலிருந்து வந்தவை என்றும் வருவாயத்துறையின் அறிக்கை சொல்கிறது. ஏற்கெனவே இந்த நாடுகளிலிருந்து கடத்திவரப்படும் போதைப் பொருட்கள் அதிகமாக சிக்கும் நிலையில், தங்கக் கடத்தலும் அதிகரித்துள்ளது.

உலக அளவில் 28.4 கோடி பேர் கள்ளக்கடத்தல் போதைப் பொருளை பயன்படுத்துகிறார்கள் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அதே அறிக்கையில், கடத்தல் ஓப்பியம் பயன்படுத்துபவர்கள் அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனக் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios