மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த இளைஞரை, பெண்வீட்டைச் சேர்ந்தவர்கள் கொலை செய்த சம்பவம் தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில், 23 வயது இளைஞர் ஒருவர் காதலியின் குடும்பத்தினரால் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத் உள்ளது.

டெல்லியைச் சேர்ந்தவர் அங்கித் சக்சேனா (23). புகைப்பட கலைஞராக இருந்த சச்சேனா, டெல்லி ரகுவீர் நகர் அருகே வசித்து வந்தார்.

இவரும் அதே பகுதியில் உள்ள மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த வியாழன் அன்று, காதலியை சந்திப்பதற்காக தாகூர் கார்டன் மெட்ரோ நிலையம் சென்றபோது, அங்கு பெண்ணின் தாய், தந்தை, தம்பி மற்றும் அவரது உறவினர்கள் சக்சேனாவை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். 

பெண்ணின் தந்தை, சக்சேனாவின் தொண்டை மற்றும் இடுப்பு பகுதியில் கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார். இதனை சக்சேனாவின் தாய் தடுக்க முயன்றுள்ளார். அவரையும், அவர்கள் தாக்கியுள்ளனர். 

இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே சக்சேனா உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது தாயார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், பெண்ணின் தாய், தந்தை, தம்பி மற்றும் உறவினரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். பெண்ணின் தம்பி மைனர் என்பதால், சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென் தமிழகத்தில் காதலித்து திருமணம் செய்தவர்களை ஆணவக் கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் மற்றுமொரு ஆணவக் கொலை நடந்துள்ளது.