honey bee grown in face the lady challanging in traavendram

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசிக்கும் ஒரு பெண் தனது முகத்தில் தேனீக்கள் வளர்த்து பெரும் அதிசயம் செய்துள்ளார்

கடந்த நான்கு ஆண்டுகளாக தேனீக்களை வளர்த்து வருவது தனது தொழிலாக நடத்தி வருகிறார்.இதன் மூலம் கிடைக்கும் தேனை நல்ல விலைக்கு விற்று வியாபாரம் செய்து வருகிறார்.தற்போது இது குறித்து மக்களிடேயே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, தன்னுடைய முகத்தில் தேநீகளை வளர்த்து வந்துள்ளார். இது குறித்து முகத்தில் தேனீக்கள் இருந்தபடியே செய்தியாளரிடம் பேட்டி கொடுத்துள்ளார் இந்த பெண்மணி.

அப்போது, கடந்த நான்கு ஆண்டுகளாக தேனீக்களை வளர்த்து வருவதாகவும், தேனீக்கள் என்றால்,கொட்டிவிடும் என பலரும் பயப்பட செய்வார்கள் ஆனால் அதனை முறையாக வளர்க்க தெரிந்துக்கொண்டால் எந்த பாதிப்பும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் இதனை செய்யலாம்.

அதனால் தான் நான் தற்போது என் முகத்தில் இப்படி தேனீக்களை வளர்த்து வந்துள்ளேன்...நான் மட்டும் இல்ல என் பிள்ளைகளும் எந்த பயமும் இன்றி,தேனீக்கள் வளர்ப்பார்கள் என்று தெரியது உள்ளார்.

ஒரு தேனீ கண்டாலே எங்கு நம்மை கொட்டி விடுமோ என்று எண்ணி பயந்து போகும் தருணத்தில், இந்த பெண்மணி தன்னுடைய முகத்திலேயே இவ்வாறு பயம் இல்லாமல் தேனீக்கள் வளர்த்து இருப்பதை கண்டு அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கி உள்ளனர்.